எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம், ஜனநாயக படுகொலை.. துரைமுருகன் காட்டம்!
எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது ஜனநாயக படுகொலை என திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை: தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது ஜனநாயக படுகொலை என திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களான தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல், செந்தில்பாலாஜி உள்ளிட்ட 18 எம்எல்ஏக்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப்பெறுவதாக அறிவித்தனர். இதைத்தொடர்ந்து ஆளுநரிடமும் ஆதரவை திரும்பப்பெறுவதகா கடிதம் அளித்தனர்.
இதுகுறித்து 18 எம்எல்ஏக்களும் விளக்கம் அளிக்க சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். ஆனால் குடகு ரிசார்ட்டில் தங்கியுள்ள தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் விளக்கம் அளிக்கவில்லை.

துரைமுருகன் கண்டனம்
இந்நிலையில் 18 எம்எல்ஏக்களையும் சபாநாயகர் தனபால் இன்று தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பதற்கு திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகப் படுகொலை
எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் ஜனநாயகப் படுகொலை என துரைமுருகன் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிருபிக்க வேண்டும் என்றும் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார்.

ஒருதலைப்பட்சமாக நடக்கிறார்
பெரும்பான்மையை நிரூபிக்காமால் ஆட்சியாளர்கள் தங்களை எதிர்த்த 18 பேரை வீட்டிற்கு அனுப்புவது நியாயமில்லை என்றும் அவர் கூறியுள்ளார். நேர்மையாக நடக்க வேண்டிய சபாநாயகர் ஒருதலைபட்சமாக நடக்கிறார் என்றும் துரைமுருகன் சாடியுள்ளார்.

வெட்கப்படுகிறேன் வேதனைப்படுகிறேன்
இந்த அக்கிரமத்தை செய்த சபாநாயகரை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்றும் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார். சபாநாயகரின் நடவடிக்கைக்காக தான்
வெட்கப்படுவதாகவும் வேதனைப்படுவதாகவும் துரைமுருகன் தெரிவித்தார்.

நம்பிக்கை சரிந்துவிட்டது
சபாநாயகரின் இந்த நடவடிக்கையால் அவர் மீதான நம்பிக்கை சரிந்து விட்டதாகவும் துரைமுருகன் கூறியுள்ளார். ஒரு தலைபட்சமாக நடந்துகொள்ளும் சபாநாயகர் எப்படி எதிர்க்கட்சிகளிடம் நியாயமாக நடந்துகொள்வார் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாரம்பரியத்தை குழித்தோண்டி புதைப்பு
எடப்பாடி பழனிச்சாமியை காப்பாற்றும் நோக்கிலேயே சபாநாயகர் தனபால் எம்எல்ஏக்களை தகுதிநீக்கம்செய்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் இதன்மூலம் சபாநாயகர் சட்டசபையின் பாரம்பரியத்தை குழித்தோண்டி புதைத்துள்ளார் என்றும் துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications