அவருக்கு என்ன வியாதின்னே தெரியலை.. துரைமுருகனின் "அட்டாக்" பேச்சு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் நடந்த திமுக கண்டனக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் துரைமுருகன், சட்டசபை சபாநாயகர் தனபாலையும், அமைச்சர்களையும் கிண்டலடித்துப் பேசி கலாய்த்தது திமுக தொண்டர்களை கலகலப்பாக்கியது.

தமிழக சட்டசபையில் பங்கேற்க திமுக எம்.எல்.ஏ.க்கள் 80 பேருக்கும் சபாநாயகர் ஒரு வாரம் தடை விதித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னையில் திமுக சார்பில் கண்டனக் கூட்டம் நடைபெற்றது.

Duraimurugan attacks TN Assembly speaker

திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் துரைமுருகனும் கலந்து கொண்டு பேசினார். ஏற்கனவே சட்டசபை வளாகத்தில் நடந்த மாதிரி சட்டசபை போராட்டத்தின்போது "சபாநாயகர் பதவி" வகித்தார் துரைமுருகன். இந்த நிலையில் இந்த கண்டனக் கூட்டத்தில் தனத பாணியில் கடுமையாக தாக்கி் பேசினார் துரைமுருகன்.

சபாநாயர் அடிக்கடி எழுவதையும், அமைச்சர்கள் பேசும் விதத்தையும், அதிமுக எம்.எல்.ஏக்கள் பேசுவதையும் அவர் தனது பாணியில் காமெடி கலந்து தாக்கியது கூட்டத்தினரை ரசிக்க வைத்தது... துரைமுருகன் பேச்சு முழுவதும் நக்கல், நையாண்டி, கிண்டல்தான்... கூடவே சொல்ல வந்த பாயிண்ட்டையும் அவர் அழுத்தம் திருத்தமாக கூறினார்.. மு.க.ஸ்டாலின் பிரிட்டிஷ்காரன் மாதிரி என்று அவர் ஒரு பன்ச் வைத்தது ஹைலைட்!

துரைமுருகன் பேச்சை நீங்களும் கேளுங்க!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+