அதுக்காகத்தான் விஜயபாஸ்கருக்கு பதவி கொடுத்ததாமே..? குண்டுபோடும் துரைமுருகன்!!
குட்கா ஊழலில் காட்டிக்கொடுக்காமல் இருக்கவே அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அமைப்பு செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளதாக திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

கோவை: குட்கா ஊழலில் யாரையும் காட்டிக்கொடுக்காமல் இருக்கவே அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அமைப்பு செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளதாக திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க.வின் அமைப்பு செயலாளர்களாக முன்னாள் மத்திய மந்திரி என்.செஞ்சி ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர்கள் எம்.பரஞ்சோதி, ப.மோகன் மற்றும் முருகையா பாண்டியன் எம்.எல்.ஏ., சின்னத்துரை ஆகிய 5 பேர் புதிதாக நியமிக்கப்பட்டு இருந்தனர்.
இந்நிலையில் மேலும் 3 பேரை கட்சி தலைமை அமைப்புச் செயலாளராக நியமித்து நேற்று உத்தரவு பிறப்பித்தது. அதன்படி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் ஏ.பாப்பா சுந்தரம், மதுரை புறநகர் மாவட்ட முன்னாள் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான முத்துராமலிங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

எதிர்க்கட்சிகள் விமர்சனம்
ஏற்கனவே குட்கா ஊழல்வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு தொடர்புள்ளதாக கூறி அவரை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அவருக்கு கட்சியில் பதவி கொடுக்கப்பட்டதை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

மின்தடையே இருக்காது
இந்நிலையில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர், பேசியதாவது "தமிழகத்தில் மின்தடையே இருக்காது என ஒரு அமைச்சர் சொல்கிறார்.

மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்
ஆனால் முதல்வரோ நிலக்கரி கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்புகிறார். முதலில், அமைச்சர்கள் உட்கார்ந்து தமிழகத்தின் மின்சார நிலைமையை பேசிய பின்னர், மக்களுக்கு என்ன நிலைமை என்பதை தெரிவிக்க வேண்டும்.

காட்டிக்கொடுத்துவிடுவார் என்ற பயம்
குட்கா ஊழலில் தொடர்புடைய அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. பதவி கொடுக்கவில்லை என்றால் யார், யாரையோ காட்டிக்கொடுக்கும் சூழ்நிலை வரும் என்ற பயத்தில் தான் அவருக்கு பதவி கொடுக்கப்பட்டுள்ளது என துரைமுருகன் தெரிவித்தார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications