சட்டசபையில் பதிலடி கொடுக்க தயாராக இருங்கள்: திமுக எம்.எல்.ஏக்களுக்கு துரைமுருகன் பயிற்சி
சென்னை: சட்டசபையில் முதல்வர், அமைச்சர்கள், அதிமுக எம்எல்ஏக்கள் என்ன பேசினாலும் அதற்கு பதிலடி கொடுக்க நாம் தயாராக இருக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களுக்கு எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் அறிவுரை கூறியுள்ளார். அதிமுக அரசுக்கு நெருக்கடி கொடுப்பது எப்படி என்பது குறித்தும் அவர் அறிவுரை கூறியுள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று 2-வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. 89 எம்எல்ஏக்களுடன் வலு வான எதிர்க்கட்சியாக திமுக உருவெடுத்துள்ளது.

இந் நிலையில் 2016-17-ம் ஆண்டுக்கான திருத்திய பட்ஜெட் சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப் பட்டது. பட்ஜெட் மீதான விவாதம் வரும் 25ம் தேதி தொடங்குகிறது. 29ம் தேதி பட்ஜெட் மீதான விவாதத்துக்கு பதிலளித்து நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேசுகிறார்.
ஆகஸ்ட் 1 முதல் செப்டம்பர் 2ம் தேதி வரை துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீது விவாதமும் வாக்கெடுப்பும் நடைபெற உள்ளது. சட்டப் பேரவை கூட்டத்தொடர் நடை பெற இருப்பதை முன்னிட்டு திமுக எம்எல்ஏக்களின் ஆலோசனைக் கூட்டம் அக் கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நேற்று நடை பெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு திமுக பொருளாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். சட்டசபையில் அனுபவம் வாய்ந்த துரைமுருகன், தொடர்ந்து 5 முறை வெற்றி பெற்ற கொறடா அர.சக்கரபாணி ஆகியோர் எம்எல்ஏக்களுக்கு பல அறிவுரைகளை கூறினர்.
இக்கூட்டத்தில் பேசிய துரை முருகன், "கடந்த முறை 23 பேர் மட்டுமே இருந்ததால் எங்களை அதிமுகவினர் எள்ளி நகையாடினர். வெளி நடப்பு செய்ய வேண்டும். இல்லையெனில் வெளியேற்றப்படுவோம் என்ற நிலையே இருந்தது. ஆனால், இப்போது நம்மை அவ்வளவு சுலபமாக வெளியேற்ற முடியாது.
முதல்வர், அமைச்சர் கள், அதிமுக எம்எல்ஏக்கள் என்ன பேசினாலும் அதற்கு பதிலடி கொடுக்க நாம் தயாராக இருக்க வேண்டும். கடந்த 5 ஆண்டு கால அதிமுக அரசின் கொள்கை விளக்க குறிப்புகள், பட்ஜெட் உரைகள், 110 விதியின் கீழ் முதல்வர் படித்த அறிக்கை கள், முதல்வர், அமைச்சர் களின் பேச்சுகளை படித்து குறிப்பெடுத்து பதிலடி கொடுக்க தயாராக இருக்க வேண்டும் என்றும் துரைமுருகன் பேசியதாக கூட்டத்திற்கு சென்று வந்த எம்.எல்.ஏக்கள் கூறினர். ஆக சட்டசபை பட்ஜெட் கூட்டம் களை கட்டும் என்றே எதிர்பார்க்கலாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications