அண்ணாவுடன் இணைந்தார் கருணாநிதி.. 5 மணி நேரத்தில் ஏற்பாடு செய்த தம்பிகள்!
கருணாநிதியின் இறுதி சடங்குகள் அண்ணா சமாதி அருகே நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. 5 மணி நேரத்துக்குள் அதற்கான முழு ஏற்பாடுகளையும் செய்துள்ளார் துரைமுருகன்.
சென்னை: மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் சென்னை மெரினாவில், அண்ணா சமாதி அருகே இன்று முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, கருணாநிதியின் தம்பிகளான கட்சியின் மூத்த தலைவர் துரைமுருகன் உள்ளிட்டோர் 5 மணி நேரத்தில் செய்துள்ளனர்.
திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை உயிரிழந்தார். அண்ணா சமாதிக்கு அருகே உடலடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று திமுக சார்பில் கோரப்பட்டது. ஆனால், அதை தமிழக அரசு ஏற்கவில்லை.

அதையடுத்து திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டு, நேற்று இரவே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை இன்று காலையும் நடந்தது.
விசாரணையின் முடிவில், மெரினாவில் அண்ணா சமாதி அருகே கருணாநிதி உடலடக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இன்று மதியம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உடனடியாக திமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் களத்தில் இறங்கினார். பொதுப் பணித் துறை அதிகாரிகளுடன் இணைந்து, இடம் தேர்வு செய்யப்பட்டது.

அண்ணா சமாதிக்கு வலது புறத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு, உடனடியாக அங்கு பணிகள் துவங்கின. முன்னாள் பொதுப் பணித் துறை அமைச்சர் என்பதால், துரைமுருகனுக்கு என்னென்ன நடவடிக்கைகள் எப்படி எடுக்க வேண்டும் என்பது அத்துப்படி.

5 மணி நேரத்துக்குள்ளாக, அண்ணாவின் அருகில் கருணாநிதியின் உடலடக்கம் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும், கருணாநிதியின் தம்பிகளான துரைமுருகன் உள்ளிட்ட கட்சியினர் மேற்கொண்டனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications