குஷ்பு இட்லி தயாரிப்பது எப்படி: இதுக்கும் பயிற்சி 'டிவிடி'யா?
சென்னை: குஷ்பு இட்லி தயாரிப்பது எப்படி என்று கற்றுக் கொடுக்கும் டிவிடி சந்தையில் உள்ளது உங்களுக்கு தெரியுமா?
நடிகை குஷ்புவுக்கு கோலிவுட் ரசிகர்கள் கோவில் கட்டினர். மேலும் அவரது பெயரில் இட்லியையும் அறிமுகப்படுத்தினர். குஷ்பு இட்லி என்றால் அது மெது மெதுன்னு மல்லிகைப்பூ போன்று இருக்கும் என்று ரசிகர்கள் பெருமையாக கூறி வருகிறார்கள்.

இன்றும் கடைக்கு சென்றால் பலர் குஷ்பு இட்லி கேட்கிறார்கள். இந்நிலையில் கோவையில் உள்ள ஆசீர் மசாலா புட்ஸ் குஷ்பு இட்லி தயாரிக்க கற்றுக்கொடுக்கும் டிவிடியை விற்பனை செய்து வருகிறது. டிவிடி தவிர புத்தகமும் உள்ளது. இது குறித்து ஆசீர் புட்ஸ் நகரில் பல்வேறு இடங்களில் விளம்பர போஸ்டர்கள் ஒட்டியுள்ளது.
😃😃😃😃😃😃"@sdhanasekAR: Ha ha #tamil #khusbooidly cc: @khushsundar pic.twitter.com/2s4XqvawEc"
— khushbusundar (@khushsundar) November 2, 2014 அத்தகைய போஸ்டரை ஒருவர் போட்டோ எடுத்து ட்விட்டரில் போட்டுள்ளார். அந்த ட்வீட்டை பார்த்த குஷ்பு சிரிப்பது போன்ற ஸ்மைலி போட்டுள்ளார்.
நடிகைகள் பெயரில் புடவைகள், சிகை அலங்காரம் ஆகியவை பொதுவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications