சேலம் மேயருக்கு ஒரு சபாஷ் போட்டி.. வெல்வாரா 'சவுண்டு'?
சேலம்: சேலம் மாநகராட்சி மேயர் சவுண்டப்பனுக்கு (செல்லமாக அந்த ஊரில் சவுண்டு என்றுதான் சொல்கிறார்களாம்) ஒரு போட்டியை வைத்துள்ளது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI).
சேலம் மாநகரில் சாலைகள் படு மோசமாக இருப்பதாகவும், மழைக்காலங்களில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் பயணிக்க முடியாமல் மக்களும், வாகனங்களும் திணறுவதாகவும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமானது குற்றம்சாட்டி வருகிறது. பல கட்டப் போராட்டங்களையும் இந்த அமைப்பு நடத்தியுள்ளது.

இந்த நிலையில் அந்த ஊரில் போஸ்டர் ஒன்றைப் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இந்த அமைப்பு. அந்த போஸ்டரில்,
மேயருக்கு ஒரு லட்சம் பரிசு
சேலம் மாநகர் சாலைகளில் மாநகராட்சி மேயர் கீழே விழாமல் இரு சக்கர வாகனத்தில் ஒருமுறை பயணித்தால் ஒரு லட்சம் பரிசு என எழுதப்பட்டுள்ளது.
வாட்ஸ் ஆப்பில் வலம் இந்த போஸ்டர் தற்போது சேலம் நகரை கலக்கி வருகிறதாம்.












Click it and Unblock the Notifications