மின் ஊழியர் வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைப்பு.. பிப்.12 வரை போராட்டம் நடைபெறாது!
நாளை நடைபெற இருந்த மின் ஊழியர் வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.
சென்னை: நாளை நடைபெற இருந்த மின் ஊழியர் வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.
தமிழக மின் வாரிய ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டம் நடத்த போவதாக அறிவித்து இருந்தனர். முக்கிய கோரிக்கையாக குறைந்தபட்ச மாத சம்பளமாக 18 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று கேட்டார்கள்.

அதேபோல் காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்றனர். மேலும் ஊதிய உயர்வு மாறிலியை 2.57 சதவிகிதமாக மாற்ற வேண்டும் என்றனர்.
முக்கியமாக 2015 டிசம்பரில் இருந்து வர வேண்டிய 26 மாத நிலுவை தொகையை திரும்ப கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இதற்காக காலவரையற்ற வேலைநிறுத்தம் நாளை முதல் நடக்கும் என்று கூறி இருந்தனர்.
ஆனால் இன்று தமிழக அரசு அவர்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்தது. அதில் பிப்.12 வரை முடிவெடுக்க அவகாசம் கேட்டு இருந்தது.
இதன் காரணமாக நாளை நடைபெற இருந்த மின் ஊழியர் வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. பிப்.12 வரை போராட்டம் நடைபெறாது என மின் ஊழியர் சங்கம் தெரிவித்து இருக்கிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications