மத்திய பட்ஜெட் தாக்கலான சில நாட்களில் தமிழக சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிப்பு?
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கான தேதி மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்படலாம் என டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல்கள் ஒன்றாக நடத்தப்பட உள்ளன. தமிழக சட்டசபையின் பதவிக் காலம் மே 22-ந் தேதியுடன் முடிவடைகிறது.

அண்மையில் தமிழகம், புதுச்சேரியில் ஆய்வு நடத்திய தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி, மே 31-ந் தேதிக்குள் அனைத்து மாநில தேர்தல்களும் நடத்தி முடிக்கப்படும் என்றார். தேர்தலுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
தமிழக அரசியல் கட்சிகளும் வேட்பாளர் நேர்காணல்கள், பிரசாரங்கள் என தேர்தல் பணிகளில் மும்முரமாக உள்ளன.
தற்போது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. நாளை ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். வரும் 29-ந் தேதி பொதுபட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்த பட்ஜெட் தாக்கல்களுக்குப் பின்னரே சட்டசபை தேர்தல்களுக்கான தேதி அறிவிக்கப்படலாம் என தெரிகிறது. அனேகமாக மார்ச் முதல் வாரத்தில் தமிழக சட்டசபை தேர்தலுக்கான அட்டவணை வெளியிடப்பட வாய்ப்பிருக்கிறது என்கின்றன டெல்லி தகவல்கள்.


Click it and Unblock the Notifications
