தேர்தல் விதிமீறல்... தமிழக கட்சிகள் மீது 2764 வழக்குகள் பதிவு... 632 வழக்குகளுடன் அதிமுக பர்ஸ்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக கட்சிகள் மீது 2,764 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் அதிமுக மீது மட்டும் 632 வழக்குகள் போடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் அடுத்தமாதம் 16ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதலே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து விட்டன. அந்தவகையில், தேர்தல் நடத்தை விதிகளை மதிக்காமல், மீறி நடக்கும் கட்சிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி, இதுவரை தமிழகத்தில் மட்டும் 2,764 தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்குகள் போடப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக அதிமுக மீது 632 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

EC filed 2,764 cases

இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் திமுக உள்ளது.இதன் மீது 530 வழக்குகள் போடப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து, தே.மு.தி.க., 155 வழக்குகளுடம் மூன்றாவது இடத்தில் உள்ளது.

இது தவிர மற்ற கட்சிகளின் மீது போடப்பட்டுள்ள தேர்தல் நடத்தை விதிமீறலின் வழக்குகளின் விபரமாவது:-

பா.ம.க. - 104
விடுதலை சிறுத்தைகள் - 92
காங்கிரஸ் - 82
பா.ஜ.க - 69
மா.கம்யூ. - 57
ம.தி.மு.க. - 51
இ.கம்யூ. - 37
த.மா.கா. - 28
புதிய தமிழகம் கட்சி - 27 வழக்குகள்

மேற்கூறிய கட்சிகள் மீது மட்டுமின்றி மீதி 900 வழக்குகள் இதர கட்சியினர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+