தேர்தல் ஏற்பாடுகள்.... அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் இன்று ஆலோசனை
சென்னை: சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தமிழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி தலைமையிலான குழு இன்று ஆலோசனை நடத்துகிறது.
தமிழகம், புதுச்சேரி மாநிலங்களின் தேர்தல் பணிகளை ஆய்வு செய்வதற்காக தலைமைத் தேர்தல் ஆணையாளர் நசீம் ஜைதி, ஆணையாளர்கள் ஏ.கே.ஜோதி, ஓம் பிரகாஷ் ராவத் உள்ளிட்டோர் அடங்கிய குழு நேற்று மாலை சென்னை வந்தது. அந்தக் குழு புதுச்சேரி சென்று தேர்தல் ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது.

புதுச்சேரியில் ஆய்வுப் பணிகளை முடித்த தேர்தல் ஆணையக் குழு சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று மாலை 6 மணிக்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்துகிறது. பின்னர் இரவு 7.30 மணியில் இருந்து 8.30 மணிவரை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி உள்ளிட்ட பல அதிகாரிகளை சந்தித்துப் பேசுகின்றனர்.
பின்னர் நாளை காலை 9.30 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை, தலைமைத் தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல் துறை கண்காணிப்பாளர்கள், டி.ஐ.ஜி., ஐ.ஜி. ஆகியோரை சந்தித்து ஆலோசிக்கின்றனர். அதைத் தொடர்ந்து தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், டி.ஜி.பி., வருமான வரித்துறை ஆணையாளர், கலால் வரித்துறை ஆணையாளர் ஆகியோருடன் ஆலோசனை நடத்த உள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications