For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வேட்பு மனுக்கள் விவகாரம்: விண்ணப்பத்தையே நிரப்பாமல் மக்களை முட்டாளாக்கும் தீபா!

வேட்பு மனுக்கள் விவகாரத்தில் மக்களை திட்டமிட்டே முட்டாளாக்குகின்றனர் தீபாவும் விஷாலும்.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    போட்ட கெட்டப் எல்லாம் வேஸ்ட்டா போச்சே!...வீடியோ

    சென்னை: தமிழ்நாட்டு மக்களை படுமுட்டாள்களாக்க முடியும் என்பதற்காகவே வேட்பு மனுவை முழுமையாக பூர்த்தி செய்யாமல் காமெடி செய்து மக்களையும் முட்டாளாக்கப் பார்த்துள்ளார் தீபா.

    ஜெயலலிதாவின் முகச் சாயலாம், அண்ணன் மகளாம்.. உடனே தமிழகத்து ரசிக சிகாமணிகள் சின்ன ஜெயலலிதாவாக்கிவிட்டனர் தீபாவை. அவ்வளவுதான் பத்திரிகையாளராக இருந்தேன் என பீற்றிக் கொள்ளும் தீபாவின் தலைக்குள்ளும் மமதை குடிகொண்டுவிட்டது.

    அரசியலில் எத்தனை கோமாளித்தனங்களை செய்ய முடியுமோ அத்தனையையும் அரங்கேற்றிக் கொண்டே இருக்கிறார். ஆனால் காரியத்தில் கண்ணாக இருப்பது போல, இன்னொரு பக்கம் அவருக்கு வர வேண்டியதும் வந்து கொண்டே இருப்பதாக அவருக்கு வலதும் இடதுமாக இருந்தவர்களே குற்றம்சாட்டியும் உள்ளனர்.

    அடிமேல் அடிதான்

    அடிமேல் அடிதான்

    ஏற்கனவே டூப்ளிகேட் ஜெயலலிதா வேஷம் போட்ட சசிகலா ஜெயிலுக்குப் போனார். இன்னொரு டூப்ளிகேட் ஜெயலலிதாவான கிருஷ்ணப்பிரியாவோ, வருமான வரிசோதனையில் சிக்கினார். 3-வது டூப்ளிகேட் ஜெயலலிதா வேஷம் போட்ட தீபா உஷாராகிக் கொண்டார்.

    திடீர் ஒப்பாரி

    திடீர் ஒப்பாரி

    இதனால் ஆர்கே நகர் தேர்தலுக்கான வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய கடைசி நாளில் கடைசி நேரத்தில் தலைவிரி கோலமாக வந்தார். அத்துடன் அவர் போயிருந்தாலும் பரவாயில்லை. வேட்புமனுவைத் தாக்கல் செய்த கையோடு, என் மனுவை தள்ளுபடி செய்துவிடுவார்கள் என ஒப்பாரி வைத்தார்.

    மக்கள் முட்டாள்களாம்

    மக்கள் முட்டாள்களாம்

    இத்தனைக்கும் கடந்த தேர்தலில் இதே ஆர்கே நகர் தேர்தலில் போட்டியிட்டு பிரசாரம் செய்தவர் இந்த தீபா. இப்போது பல படிவங்களை பூர்த்தி செய்யாமலேயே வேண்டுமென்றே ஒரு கண்துடைப்புக்காக ஒரு வேட்புமனுவைத் தாக்கல் செய்திருக்கிறார். இதையும் கூட தமிழக மக்கள் நம்புவார்கள்.. அந்த அளவுக்கு முட்டாள்கள் என அரைவேக்காடு தீபாக்கள் நினைத்து கொண்டிருப்பதுதான் வேதனை.

    அவமானத்தின் உச்சம்

    அவமானத்தின் உச்சம்

    வேண்டுமென்றே வேட்புமனுவை முழுமையாக பூர்த்தி செய்யாமல்; தம்முடைய வேட்புமனு நிராகரிக்கப்பட வேண்டும் என்பதற்காக ஒருநாடகத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறார் தீபா. இந்த அரைவேக்காட்டையும் நம்பி அல்லக்கைகளும் ஊடகங்களும் அந்த தீபாவுக்கு பின்னாலேயே ஓடிப் போவதுதான் அவமானத்தின் உச்சம்!

    English summary
    After Deepa’s nomination the Election Commission Officer rejected Actor Vishal’s nomination for RK Nagar by-poll.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X