சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் மாற்றம்- திரிபாதியை நியமித்தது தேர்தல் ஆணையம்!!
Subscribe to Oneindia Tamil

லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில் தமிழக தேர்தல் பணி டிஜிபியாக அனூப் ஜெய்வாலை அண்மையில்தான் நியமித்திருந்தது தேர்தல் ஆணையம். இதைத் தொடர்ந்து சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் , நாமக்கல் எஸ்.பி. ஆகிய இரு காவல்துறை அதிகாரிகள், 3 மாவட்ட ஆட்சியர்களை இன்று மாற்றியுள்ளது.
சென்னை மாநகர கமிஷனராக, சிறைத்துறை டிஜிபியான திரிபாதியையும் நியமித்து உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகர கமிஷனராக திரிபாதி பதவியில் இருந்தார். 2012ஆம் ஆண்டு சென்னை அமெரிக்க தூதரகம் முன்பு முஸ்லிம்கள் திரண்டு போராட்டம் நடத்திய விவகாரத்தில் திரிபாதி மாற்றப்பட்டார்.
நாமக்கல் மாவட்ட எஸ்.பி,யும் மாற்றப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்ட புதிய எஸ்.பி.யாக சந்தோஷ் நியமிக்கப்பட்டுள்ளார். சேலம், ஈரோடு, வேலூர் மாவட்ட ஆட்சியர்களையும் தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளது.












Click it and Unblock the Notifications