ஆட்டோவில் பறந்த மளிகை பொருட்கள்... துரத்திப் பிடித்து மடக்கிய அதிகாரிகளால் பரபரப்பு!
நெல்லை: நெல்லையில் மகளிர் சுய உதவி குழுவினருக்கு வழங்குவதற்காக ஆட்டோவில் கொண்டு சென்ற மளிகை பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலை ஓட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமுலில் உள்ளன. வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள், பணம் வினியோகிப்பதை தடுக்கும் பொருட்டு பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகி்ன்றனர்.

பாளை விஎம் சத்திரம் செக்போஸ்டில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லோடு ஆட்டோவை நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது ஆட்டோவில், மளிகை பொருட்கள் அடங்கிய 400 பாக்கெட் இருப்பது தெரிய வந்தது. அந்த லோடு ஆட்டோவை ஓட்டி வந்த டிரைவர் மாரியப்பனிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அவர், விருதுநகரில் உள்ள தனியார் நிறுவனம் மூலம் செய்துங்கநல்லூரில் உள்ள மகளிர் சுய உதவி குழுவினருக்கு மாதம்தோறும் மளிகை பொருட்கள் சப்ளை செய்யப்படுவதாகவும், இதற்காக அவர்களிடம் இருந்து தவணை முறையில் பொருட்களை கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். பாளை குலவணிகர்புரத்தில் இருந்து இந்த மளிகை பொருட்களை எடுத்து செல்வதாகவும் தெரிவித்தார்.
இருப்பினும் இதற்குரிய ஆவணம் அவரிடம் இல்லை. இதையடுத்து மளிகை பொருட்களை பறிமுதல் செய்து பெருமாள்புரம் போலீசில் ஓப்படைத்தனர். இது தொடர்பாக குடோன் மேலாளர் பழனிசாமியிடம் விசாரணை நடந்து வருகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications