வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்க வாய்ப்பு இல்லை: ராஜேஷ் லக்கானி
சென்னை: மழையால் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்பட வாய்ப்பு இல்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

மழையால் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்க வாய்ப்பு இல்லை. 6 மணிக்கு முன்பு வருபவர்களுக்கு டோக்கன் அளித்து அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படும்.
தென் மாவட்டங்களில் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. சென்னையில் சில பகுதிகளில் வாக்கு சதவீதம் குறைந்துள்ளது. வாக்குச்சாவடிகளில் உள்ள பெண் ஊழியர்களின் பாதுகாப்பு கருதி வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிப்பது குறித்து முடிவு செய்யவில்லை என்றார்.
மழை காரணமாக வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டுள்ளதால் வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்குமாறு முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக மூத்த தலைவருமான டி.ஆர். பாலு தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தார். மேலும் வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்க வேண்டும் என அதிமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் கோரிக்கை விடுத்தன என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக ஒட்டுமொத்தமாக வாக்குப்பதிவு எப்படி இருக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள் என செய்தியாளர்கள் கேட்டதற்கு லக்கானி சிரித்துக் கொண்டே கூறுகையில்,
எதிர்பார்க்கத் தான் நீங்கள் உள்ளீர்களே. வாக்குப்பதிவு முடிந்த பிறகு பதிவான வாக்குகளை வைத்து வாக்கு சதவீதத்தை அறிவிக்கவே நான் உள்ளேன் என்றார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications