காஞ்சிபுரம் "டான்" ஸ்ரீதரின் மனைவி குமாரி கைது.. அமலாக்கப் பிரிவிடம் சிக்கினார்!
காஞ்சிபுரம் டான் ஸ்ரீதரின் மனைவி குமாரியை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை: காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவரும், பல சட்டவிரோத தொழில்களில் ஈடுபட்டு கோடிக்கணக்கில் சம்பாதித்து தற்போது துபாயில் பதுங்கியிருப்பவருமான ஸ்ரீதரின் மனைவி குமாரியை அமலாக்கப் பிரிவு கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இன்டர்போல் போலீஸாரே தேடி வரும் தாதா ஸ்ரீதர். காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர். ரூ. 150 கோடிக்கு மேல் சொத்துக்களை வைத்துள்ளவர். அத்தனையையும் தற்போது அமலாக்கப் பிரிவு முடக்கி வைத்துள்ளது.

சாராய வியாபாரி சக்கவர்த்தியிடம் அடியாளாக சேர்ந்து பின்னர் அவரது மகளையே திருமணம் செய்து கொண்டு தனிப் பெரும் கள்ளச்சாராய வியாபாரியாக உருவெடுத்தவர் ஸ்ரீதர். ரியல் எஸ்டேட், செம்மரக் கடத்தல் என பல தொழில்களில் ஈடுபட்டவர்.
உள்ளூரில் பிரச்சினைகள் அதிகரித்ததைத் தொடர்ந்து துபாய்க்குத் தப்பி ஓடி விட்டார். இப்போது வரை அங்குதான் இருக்கிறார். அவரைக் கைது செய்து கொண்டு வரும் முயற்சிகள் இதுவரை பலன் தரவில்லை.
இந்த நிலையில் ஸ்ரீதரின் மனைவி குமாரியையும் போலீஸார் தொடர்ந்து தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று அவர் வெளிநாடு ஒன்றிலிருந்து சென்னைக்கு வந்தார். அங்கு வைத்து அவரை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் விசாரணைக்காக அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.
ஸ்ரீதர் சொத்தில் 80 சதவீதம் குமாரி பெயரில் இருப்பதாக அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கூறுகின்றனர். எனவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். விரைவில் ஸ்ரீதரையும் பிடிப்போம் என்றும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
தொடர்பான செய்திகள்:
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications