திருச்சி, விழுப்புரம் உட்பட 4 மாவட்ட எம்எல்ஏக்களுடன் முதல்வர் 3 மணிநேரம் ஆலோசனை- தக்க வைக்க முயற்சி?
திருச்சி, விழுப்புரம் உட்பட 4 மாவட்ட எம்.எல்.ஏக்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சுமார் 3 மணிநேரம் ஆலோசனை நடத்தினார்.
சென்னை: திருச்சி, விழுப்புரம் உட்பட 4 மாவட்ட எம்.எல்.ஏக்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமது இல்லத்தில் இன்று சுமார் 3 மணிநேரம் ஆலோசனை நடத்தினார்.
தினகரன் ஆதரவு 22 எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கிய நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை இழந்தது.

கைவிரித்த ஆளுநர்
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக் கோரி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் ஆளுநர், அதிமுகவில் நடப்பது உட்கட்சி பிரச்சனை; பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட முடியாது என கைவிரித்து விட்டார்.

ஜனாதிபதியுடன் சந்திப்பு
இதையடுத்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் எதிர்க்கட்சிகள் முறையிட உள்ளன. இந்நிலையில் திடீரென அதிமுக எம்.எல்.ஏக்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னைக்கு வரவழைத்துள்ளார்.

எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை
இன்று முதல்வர் எடப்பாடியார் தமது இல்லத்தில் திருச்சி, விழுப்புரம் உட்பட 4 மாவட்டங்களின் எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை நடத்தினார். இச்சந்திப்பில் மாவட்ட அமைச்சர்களும் உடன் இருந்தனர். இந்த ஆலோசனை சுமார் 3 மணிநேரம் நடைபெற்றது.

தக்க வைக்க முயற்சி?
எம்.எல்.ஏக்களின் தொகுதிகளுக்கான தேவைகள் உள்ளிட்டவை இந்த ஆலோசனையில் விவாதிக்கப்பட்டன. இருப்பினும் எம்.எல்.ஏக்களை தக்க வைக்கும் முதல்வர் எடப்பாடியாரின் முயற்சியாகவே இது பார்க்கப்படுகிறது.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்?












Click it and Unblock the Notifications