டிடிவி தினகரன் என்ன அவ்ளோ பெரிய ஆளா? கட்சிக்கு என்ன செய்தார்? - எடப்பாடியார் கடும் தாக்கு
டிடிவி தினகரன் யார்? அவர் கட்சிக்கு என்ன செய்தார் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: டிடிவி தினகரன் ஒன்றும் பெரிய மனிதரில்லை. கட்சிக்கு அவர் என்ன செய்தார்? எத்தனை போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றார் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுள்ளார்.
மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் டிடிவி தினகரன் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. உடனே கோபப்பட்ட முதல்வர், தினகரன் ஒன்றும் பெரிய ஆள் இல்லை என்றார்.

தினகரன் கட்சிக்கு அவர் செய்தார்? அவர் என்ன சேவை செய்தார்? எத்தனை போராட்டங்களில் பங்கேற்றார். நான் 6 முறை ஜெயிலுக்கு போயிருக்கிறேன். பலமுறை எம்எல்ஏவாக இருந்திருக்கிறேன். ஊடகங்கள்தான் பரபரப்புக்காக தினகரனை பேட்டி எடுத்து போட்டு பெரிய ஆளாக்குகிறீர்கள் என்றார்.












Click it and Unblock the Notifications