சசிகலா குடும்பம் மைனஸ்தான்.. ஒருபோதும் பிளஸ் ஆக முடியாது... கலாய்த்த எடப்பாடி
சென்னை: சசிகலா குடும்பமே மைனஸ்தான்... அவர்கள் ஒருபோதும் பிளஸ் ஆகவே முடியாது என கொங்கு அமைச்சர்களிடம் கிண்டலடித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி.
எடப்பாடியின் ராஜகுருவாக விஸ்வரூபமெடுத்திருக்கிறார் ஆடிட்டர். அவரது ஆலோசனைப்படியே சசிகலா குடும்பத்தை எதிர்க்க துணிந்தார் எடப்பாடியார்.
இருப்பினும் ஆட்சியைக் காப்பாற்றும் வகையில் திவாகரனுடன் கை கோர்த்தார் எடப்பாடி. திவாகரன் எப்போதுமே நேரடி அரசியலில் இருந்தது இல்லை என்றாலும் அதிமுகவில் மறைமுக ஆதிக்கம் செலுத்தக் கூடியவராக இருந்திருக்கிறார்.

அடுத்த ஆட்டம்
இதனால் திவாகரனுடன் இணக்கமான போக்கை கடைபிடித்து வந்தார் எடப்பாடி. ஆனால் ஆடிட்டர் தரப்போ, சசிகலா தரப்பை எதிர்ப்பதோடு நிற்காமல் மிரட்டியும் வைக்க வேண்டும் என அடுத்த ஆட்டத்துக்கு அச்சாரம் போட்டுக் கொண்டிருக்கிறார்.

திவாகரன் விளையாட்டு
இந்நிலையில்தான் மன்னார்குடியில் திவாகரன், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை நடத்த ஏற்பாடுகள் செய்தார். இந்நிகழ்ச்சியின் போஸ்டர்களில் எடப்பாடி பழனிச்சாமியின் படமும் இடம்பெற்றிருந்தது.

சசிகலா அதிரடி உத்தரவு
ஆனால் தினகரன் புறக்கணிக்கப்பட்டார். இதை பெங்களூரு சிறையில் இருந்த சசிகலாவும் ரசிக்கவில்லை. இதனால் மன்னார்குடி கூட்டத்தை ரத்து செய்ய சொல்லி உத்தரவிட்டார் சசிகலா.

எடப்பாடி கிண்டல்
இதுபற்றி கொங்கு அமைச்சர்களுடன் விவாதித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி. அப்போது சசிகலா குடும்பமே மைனஸ்தான்.. மக்கள் அப்படித்தான் பார்க்கிறார்... மைனஸ்னு ஆகிட்டவங்க எப்படி பிளஸ் ஆக முடியும் என கலாய்த்திருக்கிறார் எடப்பாடியார்.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications