தவெகவுக்கு ஆதரவு அளித்த எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் உள்ளிட்டோர் கூண்டோடு நீக்கம்! எடப்பாடி அதிரடி ஆக்ஷன்
சென்னை: சட்டசபையில் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தவர்களில் சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி, காமராஜ், சி விஜயபாஸ்கர் உள்ளிட்ட 26 பேரின் மாவட்ட செயலாளர் பதவிகளை பறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார்.. இதனையடுத்து 17 மாவட்ட செயலாளர்கள் பதவிக்கு புதியவர்களையும் எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ளார்.

இது தொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பிலும், திண்டுக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிலும் இருக்கும் திரு. நத்தம் இரா. விசுவநாதன், M.L.A., அவர்களும்,
கழக தலைமைக் நிலையச் செயலாளர் பொறுப்பிலும், கோவை புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிலும் இருக்கும் திரு. S.P. வேலுமணி, M.L.A., அவர்களும்,
கழக அமைப்புச் செயலாளர் பொறுப்பிலும், விழுப்புரம் மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிலும் இருக்கும் திரு. C.Ve. சண்முகம், M.L.A., அவர்களும்,
கழக அமைப்புச் செயலாளர் பொறுப்பிலும், திருவாரூர் மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிலும் இருக்கும் திரு. R. காமராஜ், M.L.A., அவர்களும்,
கழக அமைப்புச் செயலாளர் பொறுப்பிலும், புதுக்கோட்டை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிலும் இருக்கும் டாக்டர் C. விஜயபாஸ்கர், M.L.A., அவர்களும்,
கழக அமைப்புச் செயலாளர் பொறுப்பிலும், நாமக்கல் மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிலும் இருக்கும் திரு. பி. தங்கமணி அவர்களும்,
கழக அமைப்புச் செயலாளர் பொறுப்பிலும், தருமபுரி மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிலும் இருக்கும் திரு. K.P. அன்பழகன், M.L.A., அவர்களும்,
கழக அமைப்புச் செயலாளர் பொறுப்பிலும், திருவள்ளூர் மத்திய மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிலும் இருக்கும் திரு. பா. பெஞ்சமின் அவர்களும்,
கழக அமைப்புச் செயலாளர் பொறுப்பிலும், திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிலும் இருக்கும் திரு. உடுமலை K. ராதாகிருஷ்ணன் அவர்களும்,
கழக அமைப்புச் செயலாளர் பொறுப்பிலும், தேனி மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிலும் இருக்கும் திரு. S.T.K. ஜக்கையன், Ex. M.P., அவர்களும்,
கழக அமைப்புச் செயலாளர் பொறுப்பிலும், திருநெல்வேலி புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிலும் இருக்கும் முன்னவர் இசக்கி சுப்பையா, M.L.A., அவர்களும்,
கடலூர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. M.C. சம்பத் அவர்களும்,
திருப்பத்தூர் மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. K.C. வீரமணி, M.L.A., அவர்களும்,
கரூர் மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. M.R. விஜயபாஸ்கர், M.L.A., அவர்களும்,
ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. சு. ரவி, Ex. M.L.A., அவர்களும்,
ராணிப்பேட்டை மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. S.M. சுகுமார், M.L.A., அவர்களும்,
திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. C. மகேந்திரன், Ex. M.L.A., அவர்களும்,
நீலகிரி மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. சம்பத் D. வினோத் அவர்களும்,
திருச்சி மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. J. சீனிவாசன் அவர்களும்,
திருச்சி புறநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. M. பரஞ்சோதி அவர்களும்,
திருச்சி புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. ப. குமார், Ex. M.P., அவர்களும்,
தஞ்சாவூர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. M. ரெத்தினசாமி, Ex. M.L.A., அவர்களும்,
தஞ்சாவூர் மத்திய மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. M. சேகர் அவர்களும்,
இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம்
விழுப்புரம், கோவை புறநகர் தெற்கு, புதுக்கோட்டை வடக்கு, நாமக்கல், திருவாரூர், திருவள்ளூர் மத்தியம், இராணிப்பேட்டை கிழக்கு, இராணிப்பேட்டை மேற்கு, திருப்பத்தூர், கடலூர் வடக்கு, கிருஷ்ணகிரி மேற்கு, ஈரோடு மாநகர், திருச்சி மாநகர், கரூர், தேனி மேற்கு, திருநெல்வேலி புறநகர் ஆகிய மாவட்டங்களின், மாவட்டக் கழகச் செயலாளர்களாகக் கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் பொறுப்புகளுக்கு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.
விழுப்புரம் மாவட்டக் கழகம் மாவட்டச் செயலாளர் - திரு. R. பசுபதி, B.A., அவர்கள் (மருதூர்மேடு, விழுப்புரம் தெற்கு நகரம்)
கோவை புறநகர் தெற்கு மாவட்டக் கழகம் மாவட்டச் செயலாளர் - முனைவர் செ.ம. வேலுசாமி அவர்கள் (கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர்)
புதுக்கோட்டை வடக்கு மாவட்டக் கழகம் மாவட்டச் செயலாளர் - திரு. V.பழனிவேல், B.Sc., அவர்கள் (மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர்)
மாவட்டச் செயலாளர் - நாமக்கல் மாவட்டக் கழகம் - திரு. K.P.P.பாஸ்கர், Ex. M.L.A., அவர்கள் (நாமக்கல் நகரக் கழகச் செயலாளர்)
திருவாரூர் மாவட்டக் கழகம் - மாவட்டச் செயலாளர் - திரு. R.D. மூர்த்தி (எ) தெஷ்ணாமூர்த்தி, Ex. M.C., அவர்கள் (திருவாரூர் நகரக் கழகச் செயலாளர்)
மாவட்டச் செயலாளர் - திருவள்ளூர் மத்திய மாவட்டக் கழகம் - திரு. K.S. ரவிசந்திரன், B.Com., அவர்கள் (பூவிருந்தவல்லி நகரக் கழகச் செயலாளர்)
இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டக் கழகம் - மாவட்டச் செயலாளர் - திரு. A.P.S.லோகநாதன் அவர்கள் (மாவட்ட ஊராட்சிக் குழு முன்னாள் வார்டு உறுப்பினர், அரக்கோணம் ஒன்றியம்)
இராணிப்பேட்டை மேற்கு மாவட்டக் கழகம் - மாவட்டச் செயலாளர் - திரு. சுமைதாங்கி சி. ஏழுமலை அவர்கள் (மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர்)
திருப்பத்தூர் மாவட்டக் கழகம் - மாவட்டச் செயலாளர் - டாக்டர் S. பசுபதி, MBBS., M.D., அவர்கள் (கழக மருத்துவ அணி துணைச் செயலாளர்)
கடலூர் வடக்கு மாவட்டக் கழகம் - மாவட்டச் செயலாளர் - திரு. M.C. தாமோதரன், Ex. M.P., அவர்கள் (அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் முன்னாள் அமைச்சர்)
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டக் கழகம் - மாவட்டச் செயலாளர் - திரு. M. ராமு அவர்கள் (மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறைச் செயலாளர்)
ஈரோடு மாநகர் மாவட்டக் கழகம் - மாவட்டச் செயலாளர் - திரு. R. மனோகரன், B.A., அவர்கள் (பெரியார் நகர் பகுதிக் கழகச் செயலாளர்)
மாவட்டச் செயலாளர் - நீலகிரி மாவட்டக் கழகம் - திரு. பால. நந்தகுமார் அவர்கள் (கழக MGR இளைஞர் அணி இணைச் செயலாளர்)
திருச்சி மாநகர் மாவட்டக் கழகம் - மாவட்டச் செயலாளர் - திரு. C. கார்த்திகேயன், B.E., Ex.M.C., அவர்கள் (மாவட்ட புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர்)
கரூர் மாவட்டக் கழகம் - மாவட்டச் செயலாளர் - திரு. K.கமலக்கண்ணன், B.E., அவர்கள் (கரூர் மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர்)
தேனி மேற்கு மாவட்டக் கழகம் - மாவட்டச் செயலாளர் - திரு. V.T. நாராயணசாமி, DHMCT., அவர்கள் (கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர்)
திருநெல்வேலி புறநகர் மாவட்டக் கழகம் - மாவட்டச் செயலாளர் - திரு. K.ராமசுப்பிரமணியன், B.E., அவர்கள் (பாளையங்கோட்டை வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர்)
கழக உடன்பிறப்புகள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறேன்.
சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் (அதிமுக)
1.எடப்பாடி பழனிச்சாமி, 2.ஓஎஸ் மணியன், 3.அக்ரி கிருஷ்ணமூர்த்தி, 4.ராஜேந்திரன், 5.கேசி கருப்பண்ணன், 6.கோவிந்தராஜன், 7.சு.பழனிசாமி, 8.ராமச்சந்திரன், 9.உஷாராணி, 10.ஜெயசுதா லட்சுமிகாந்தன்,
11.சம்பத்குமார், 12.தளவாய் சுந்தரம், 13.நல்லதம்பி, மணி, 14.முக்கூர் சுப்பிரமணியன், 15.ராஜசேகர், 16.சு.ராஜேந்திரன், 17.வெங்கடாசலம், 18.வெற்றிவேல், 19.வேலழகன், 21.வேலு, 22.ஜெயசங்கரன்
ஆதரவு தெரிவித்த அதிமுக எம்.எல்.ஏக்கள்
1.எஸ்பி வேலுமணி, 2.கோ.ஹரி, 3.சி.விஜயபாஸ்கர், 4.கேபி அன்பழகன், 5.இசக்கி சுப்பையா, 6.ஆர் காமராஜ், 7.சத்தியபாமா, 8.மரகதம் குமரவேல், 09.மரகதம் வெற்றிவேல், 10.லீமா மார்ட்டின், 11.எஸ்எம் சுகுமார், 12.சேகர் திலீபன், 13.ஜெய்சங்கர், 14.என்எஸ்என் நடராஜ், 15.நத்தம் விஸ்வநாதன், 16.கா.மோகன், 17. ரவி மனோகரன், 18. இரா.ராகேஷ், 19.எம்ஆர் விஜயபாஸ்கர், 20.கே.சி.வீரமணி, 21.எஸ். ஜெயக்குமார், 22.பி.ஹரிபாஸ்கர், 23.அருண்மொழித்தேவன், 24.சிவி சண்முகம், 25.பாலகிருஷ்ணா ரெட்டி












Click it and Unblock the Notifications