மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை.. மோடிக்கு நன்றி தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமி
Recommended Video

சென்னை: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அனுமதித்ததற்காக, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
சிறந்த மருத்துவ சிகிச்சையை அளிக்கும் வகையில் மத்திய அரசு தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு முன்வந்துள்ளது.

தமிழக அரசின் கோரிக்கையின்படி மத்திய குழு 5 இடங்களில் பார்வையிட்டது. தஞ்சாவூரில் செங்கிப்பட்டி, மதுரையில் உள்ள தோப்பூர், செங்கல்பட்டு, ஈரோட்டில் பெருந்துறை, புதுக்கோட்டை ஆகிய 5 இடங்களை பார்வையிட்டது. இப்போது மதுரையில் மருத்துவமனையை அமைப்படும் என்ற ஆணையை தமிழக சுகாதார செயலாளருக்கு அனுப்பியுள்ளது.
மதுரை தோப்பூரில் 200 ஏக்கரில் 750 படுக்கை வசதியுடன் கூடிய நவீன எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியில் மருத்துவ படிப்புக்காக 100 இடங்கள் ஏற்படுத்தப்படும், 60 செவிலியர்களுக்கு இங்கு இடம் கிடைக்கும். எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைய தமிழக அரசு அனைத்து உதவிகளையும் வழங்கி ஒத்துழைப்பு கொடுக்கும். மதுரையில் எய்ம்ஸ் அமைக்க உத்தரவிட்ட பிரதமர் மோடி, சுகாதாரத்துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications