இடியாப்ப சிக்கல்.. எடப்பாடி ‘ஸ்கெட்ச்’சுக்கு குறுக்கே விழுந்த முட்டுக்கட்டை! காமராஜ் ‘சைலண்ட் கேம்’!

Subscribe to Oneindia Tamil

சென்னை : டெல்டா மண்டலத்தில் தன்னை வலிமைப்படுத்திக் கொள்ளும் வகையில் வைத்திலிங்கத்திற்கு எதிராக காமராஜை வைத்து ஸ்கெட்ச் போட்டார் எடப்பாடி பழனிசாமி. அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் காய்களை கச்சிதமாக நகர்த்திக் கொண்டிருந்த சமயத்தில் குறுக்கே ஒரு முட்டுக்கட்டை விழுந்தது.

அதிமுக பொதுச்செயலாளராக தன்னை வெற்றிகரமாக நிலைநிறுத்திக் கொண்ட எடப்பாடி பழனிசாமி, கொங்கு மண்டலத்தைப் போன்று டெல்டா மாவட்டங்களிலும் ஆழமாகக் காலூன்ற முடிவு செய்திருக்கிறார். இதற்கான அசைன்மென்ட்டை ஓ.எஸ்.மணியன் போன்ற சீனியர்களை விட்டுவிட்டு முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு கொடுத்திருக்கிறார் எடப்பாடி.

Edappadi sketch for delta: Moves of Kamaraj against Vaithilingam

திமுகவுக்கு எப்போதும் வலுவாக உள்ள திருவாரூர் மாவட்டத்தில் ஒரே தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜை டெல்டா மண்டலத்தில் அதிமுகவின் தூணாக நிறுவ முயற்சிக்கிறார் ஈபிஎஸ். ஓபிஎஸ் அணியின் வைத்திலிங்கம், அமமுக இரு தரப்பையும் கடந்து தனக்கான செல்வாக்கை பலப்படுத்த ஈபிஎஸ் விரும்புகிறார்.

டெல்டாவில் அதிமுகவை வலுப்படுத்துவதற்காக, டெல்டா மண்டலத்தில் செல்வாக்காக உள்ள ஓபிஎஸ், தினகரன் ஆதரவு தலைகளை தூக்கும் ஆபரேஷனை செய்தார் காமராஜ். டிடிவி தினகரனின் கூடாரத்தை காலி செய்யும் வகையில் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட அமமுக செயலாளராக இருந்த ஒரத்தநாடு பேரூராட்சி தலைவர் மா.சேகரை அதிமுகவில் இணைத்தார்.

ஒருகாலத்தில் வைத்திலிங்கத்தின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் மா.சேகர். எம்.பி தேர்தலில் தனக்கு சீட் வாய்ப்பு மறுக்கப்பட்டதால், அமமுகவில் சேர்த்து வைத்திலிங்கத்திற்கு எதிராகச் செயல்பட்டு வந்தார். இந்த நிலையில், அமமுகவில் இருந்து அவரைத் தட்டித் தூக்கி, வைத்திலிங்கத்திற்கும், டிடிவி தினகரனுக்கும் ஒருசேர செக் வைத்தார் காமராஜ்.

மேலும், அமமுக பொருளாளராக இருந்த மனோகரும் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் சமீபத்தில் அதிமுகவில் சேர்ந்தார். அண்மையில் ஒரத்தநாட்டிலேயே பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பட்டையைக் கிளப்பினார் எடப்பாடி. அப்போது வைத்திலிங்கத்தை மிக கடுமையாக விமர்சித்தார். வைத்திலிங்கம் அதற்கு பதிலடி கொடுக்க, இரு தரப்புக்கும் இடையே வார்த்தை மோதல் தடித்துள்ளது.

அதிமுகவுக்கு வைத்திலிங்கத்தைப் போன்ற பெருந்தலைகள் இப்போது டெல்டா மண்டலத்தில் இல்லை. ஓ.எஸ்.மணியன் போன்ற சீனியர்கள் இருந்தாலும், அவர்கள் மீது எடப்பாடிக்கு நம்பிக்கை இல்லை. அந்த இடத்தைப் பிடிக்க காமராஜ் திட்டமிட்டு வருகிறாராம். இதில் ஓரளவுக்கு வெற்றியையும் பெற்றுவிட்டார் என்கிறார்கள்.

வைத்திலிங்கம் என்கிற முண்டுக்கல்லை கட்டிக்கொண்டு ஓபிஎஸ் கடலில் இறங்கிவிட்டார். அவரது பேச்சை கேட்டு ஓபிஎஸ் தற்போது அரசியல் அனாதையாகி விட்டார். நான் சந்தித்த மனிதர்களில் அறிவே இல்லாத முண்டம் என்றால் அது வைத்திலிங்கம் தான். வைத்திலிங்கம் தொகுதி முழுவதும் இபிஎஸ் கையில் வந்துவிட்டது என வைத்தியை வறுத்தெடுத்து வருகிறார் காமராஜ்.

Edappadi sketch for delta: Moves of Kamaraj against Vaithilingam

ஆனால், இந்தச் சூழலில் தான் காமராஜின் முயற்சிகளுக்கு ஒரு முட்டுக்கட்டை விழுந்தது. ஓபிஎஸ் - டிடிவி தினகரன் இருவரும் சந்தித்துப் பேசி, ஒன்றிணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளதால், டெல்டாவில் ஓபிஎஸ், தினகரன் கைகள் வலுவடைந்துள்ளதாம். போதாக்குறைக்கு, வைத்திலிங்கம் தனது அணியினருக்கு நம்பிக்கையூட்டி வருவதால் முன்பு பேச்சு கொடுத்த நிர்வாகிகள் கூட இப்போது ஆஃப் ஆகிவிட்டனராம்.

இதனால், வைத்திலிங்கம் இடத்திற்கு நாம் வந்துவிடலாம் என காமராஜ் போட்ட பிளானில் சற்றே தொய்வு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனாலும், ஒரத்தநாடு பேரூராட்சி சேர்மன் மா.சேகருடன் சேர்ந்து வைத்திலிங்கத்திற்கு செக் வைக்கும் வேலைகளை செய்வதில் காமராஜ் மும்முரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

ஓபிஎஸ் - தினகரன் ஒருங்கிணைவு டெல்டா மண்டலத்தில் ஏற்படுத்தும் தாக்கம், சோழ மண்டல தளபதியாக கோலோச்சிய வைத்திலிங்கத்தின் செல்வாக்கு ஆகிய இடியாப்ப சிக்கல்களைக் கடந்து, காமராஜ் தனது இலக்கில் வெற்றி பெறுவாரா, டெல்டாவை வைத்து எடப்பாடி போட்ட ஸ்கெட்ச் வொர்க் அவுட் ஆகுமா என்பது போகப்போகத் தெரியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+