முதல்ல சசிகலாவை நீக்கி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுங்கள்... எம்.பி.மைத்ரேயன் திட்டவட்டம்
சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று எம்.பி.மைத்ரேயன் தெரிவித்தார்.
சென்னை: சசிகலாவை அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கி தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று அக்கட்சி எம்.பி.மைத்ரேயன் வலியுறுத்தியுள்ளார்.
அதிமுகவின் இரு அணிகளும் இணைவது என்று முடிவு செய்யப்பட்டன. அப்போது பேச்சுவார்த்தை நடத்த இரு அணிகளின் சார்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.
எனினும் யார் முதலில் சென்று பேச்சுவார்த்தையை தொடங்குவது என்று தயக்கம் காட்டி வந்தன. சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஓபிஎஸ் அணியினர் நிபந்தனைகளை விதித்தனர்.

கீழ் மட்ட தலைவர்கள் கருத்து
இந்த சூழ்நிலையில் மூத்த தலைவர்கள் பேசாமல் இருக்கும்போதும், எடப்பாடி அணியின் கீழ் மட்ட தலைவர்கள் ஆளாளுக்கு கருத்து தெரிவித்து வந்ததால் இரு அணிகளும் மோதி கொண்டன. மேலும் இது பேச்சுவார்த்தைக்கு சாதகமான சூழலையும் உருவாக்கவில்லை.

இரு அணிகளும் பிடிவாதம்
சசிகலாவை நீக்க வேண்டும் என்று ஓபிஎஸ் அணியினரும், அது முடியாது என்று எடப்பாடி அணியினரும் பிடிவாதமாக உள்ளன. மேலும் ஓபிஎஸ் அணியினரின் தொண்டர்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்திலும் தனித்து செயல்படலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

நீக்க வழி சொல்லுங்கள்
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, பொதுக்குழு கூடி சசிகலா பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டவர் என்று கூறினார். மேலும் சசிகலாவை தனிப்பட்ட முறையில் யாரும் நீக்க முடியாது எனக் கூறிய தம்பிதுரை, சசிகலா நியமன விவகாரத்திற்கு, இரு அணியினரும் பேச்சுவார்த்தை மூலம் தான் தீர்வு காண முடியும், சசிகலாவை நீக்க என்ன வழி என்பதை ஓபிஎஸ் சொல்லட்டும் என்றார்.

மைத்ரேயன் பதில்
சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்படுவார் என்று எடப்பாடி பழனிச்சாமி பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று எம்.பி. மைத்ரேயன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை கட்சியிலிருந்து நீக்க தேர்தல் ஆணையத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை தனி அணியாகவே செயல்படுவோம் என்றார் அவர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications