முட்டை விலை 45 பைசா குறைஞ்சிருச்சு… ஆம்லேட் விலை குறையுமா?
நாமக்கல்: ரம்ஜான் நோன்பு காலத்தை முன்னிட்டு நாமக்கல் மண்டலத்தில் ஒரு முட்டை 45 காசுகள் குறைந்து 3ரூபாய் 60 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளில் 45 பைசா முட்டை விலை குறைந்துள்ளதால் நுகர்வோர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
முட்டை உற்பத்தி குறைந்த காரணத்தால் சமீப காலமாக நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை உயர்ந்து கொண்டே வந்தது. கடந்த 15 தினங்களுக்கு முன்னர் 4 ரூபாய் 5 காசுகளாக இருந்த முட்டை கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

சில்லறை விலையில் ஒரு முட்டை 5 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 45 பைசா குறைந்து 3 ரூபாய் 60 காசுகளாக கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இதற்கான விலை இன்று நிர்ணயிக்கப்பட்டது. இதன் காரணமாக சில்லறை விற்பனை கடைகளில் 5 ரூபாய் வரை விற்கப்பட்ட முட்டையின் விலை குறைவதற்கான வாய்ப்பு உருவாகி உள்ளது.

ரம்ஜான் நோன்பு மற்றும் கேரளாவில் முட்டை நுகர்வு குறைந்துள்ளதால் இந்த விலை சரிவு ஏற்பட்டுள்ளதாக முட்டை பண்ணையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
முட்டை விலை குறைந்துள்ளதை அடுத்து ஹோட்டல்களில் ஆம்லேட்டுகளின் விலையை உயர்த்தியவர்கள் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது திருவாளர் பொதுஜனத்தில் கோரிக்கையாகும்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications