ஆம்லேட் கேட்டா அடிதான்!… முட்டை விலை ரூ.4.11 ஆக எகிறியது!!
நாமக்கல்: முட்டை உற்பத்தி குறைந்துள்ளதை அடுத்து முட்டை விலை அதிகரித்துள்ளது. ஒரு முட்டை ரூ. 4.11 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கோழிப்பண்ணை தொழிலில் இதுவே முட்டையின் அதிகபட்ச விலையாகும். அதே போல கடந்த 23 நாட்களில் முட்டை விலையில் 100 காசுகள் உயர்ந்துள்ளதும் முதன்முறையாகும்.
வடமாநிலங்களில், வெயில் தாக்கம் அதிகம் காரணமாக, 25 சதவீதம் கோழிகள் இறந்ததால், முட்டை உற்பத்தி குறைந்துள்ளது. அதனால், முட்டையின் நுகர்வு அதிகரித்துள்ளது. அதன் காரணமாக, நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை, அதிகப்பட்சமாக, 4 ரூபாய்11 காசாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு காரணமாக சில்லறை விலையில் ஒரு முட்டை 4ரூபாய் 75 பைசாவாக உயர்ந்துள்ளதால் நுகர்வோர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

முட்டை விலை உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை கடந்த மாதத்தின் இறுதியில் இருந்து தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வாரம் 4 முறை விலை உயர்த்தப்பட்டது.

கிடுகிடு உயர்வு
தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் விலை நிர்ணய குழு (என்.இ.சி.சி) நேற்று முட்டை விலையில் 9 காசு உயர்த்தியுள்ளது. இதன் மூலம் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 11 பைசாவாக உயர்ந்துள்ளது. கோழிப்பண்ணை தொழிலில் இதுவே முட்டையின் அதிகபட்ச விலையாகும்.அதே போல 23 நாட்களில் முட்டை விலையில் 100 காசுகள் உயர்ந்துள்ளதும் முதன்முறையாகும்.

2013ம் ஆண்டில்
கடந்த 2013 நவம்பர் 25 முதல் டிசம்பர் 7 வரை முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 4ரூபாய் 02பைசாவாக இருந்தது. அப்போது கடுமையான குளிர்காலம், முட்டை நுகர்வு அதிகமாக இருந்தால் விலை உயர்த்தப்பட்டது. ஆனால் தற்போது கோடைக்காலத்தில் முட்டை விலை உயர்ந்துள்ளது.

விலை உயர்வு ஏன்?
குளிர்பதன கிடங்குகளில் முட்டை வியாபாரிகள் சேமித்து வைத்திருந்த முட்டைகள் விற்பனையாகி விட்டதாக முட்டை விலை உயர்வு குறித்து நாமக்கல் மண்டல என்.இ.சி.சி தலைவர் செல்வராஜ் கூறியுள்ளார். தொழிலை தொடர்ந்து நடத்த பண்ணையாளர்களிடம் தற்போது உள்ள முட்டையை வாங்கியே தீரவேண்டும். அப்போது தான் முட்டை வியாபாரிகள் வடமாநிலங்களில் தொழில் செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

அச்சம் வேண்டாம்
கேரளாவில் வரும் 31ம் தேதி வரை கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, அங்கு முட்டை தேவை அதிகரிக்கும். எனவே பண்ணையாளர்கள் பதற்றம் அடையவேண்டாம், இனி மேல் முட்டைக்கு நல்ல விலை கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

வெளிமாநிலங்களில் விலை
ஒரு கிலோ முட்டைக்கோழி ரூ.69, ஒரு கிலோ கறிக்கோழி ரூ.90 ஆக தமிழகத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இதுவே பெங்களூருவில் 4ரூபாய் 20 பைசாவாக விற்பனை செய்யப்படுகிறது. மைசூரில் 4 ரூபாய் 24 பைசாவாகவும், ஹைதராபாத்தில் முட்டை 3 ரூபாய் 87 பைசாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது. விஜயவாடாவில் 3 ரூபாய் 82பைசாவாகவும், மும்பையில் முட்டை 4 ரூபாய்26 பைசாவாகவும், கொல்கத்தாவில் 4 ரூபாய் 07 பைசாவாகவும், டெல்லியில் 3ரூபாய் 63 பைசாவாகவும் முட்டை விற்பனை செய்யப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications