Ramadan 2023: ஈகை திருநாள்..இனிய ரமலான் 2023 வாழ்த்துக்கள், மெசேஜ், கவிதைகள் இங்கே !!
சென்னை: இஸ்லாமிய நாட்காட்டியின் படி ஒன்பதாவது மாதமாக வரும் ரமலான் மாதம் புனித மாதமாகும். இந்த மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு கடைபிடிக்கிறார்கள். ரமலான் நோன்பு கடைபிடிப்பது இஸ்லாமியர்களின் ஐந்து கோட்பாடுகளில் ஒன்றாகும். புனித ரம்லான் கொண்டாடப்படும் இந்த நாளில் வாழ்த்துகளை உங்கள் அன்பிற்குரியவர்களுடனும் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ள வாழ்த்து அட்டைகள், படங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
அரேபியர் ஆதியில் மாதங்களுக்குப் பெயரிட்டபோது அந்தக் காலகட்டத்தின் தட்பவெப்ப நிலைமைகளைக் கவனித்துப் பெயரிடும்போது, அதிக வெய்யிலும், வெப்பமும் கொண்ட மாதத்துக்கு 'ரமலான்' என்று பெயரிட்டனர். முஹர்ரம், ஸஃபர், ரபீஉல்அவ்வல், ரபீஉல் ஆகிர், ஜமாதுல் அவ்வல், ஜமாதுல் ஆகிர், ரஜப்,ஷஃபான் என 8 மாதங்களைத் தொடர்ந்து ஒன்பதாவதாக ரமலான் மாதம் வருகிறது. அடுத்தடுத்து ஷவ்வால், துல்கஃதா, துல்ஹஜ் என வரும்.
ரமலான் மாதத்தின் முதல் நாளில் பிறை தெரிந்ததும் முதல் நோன்பினை துவங்கி, ஷவ்வால் மாதத்தில் முதல் பிறை தெரிவதன் அடிப்படையில் ரமலான் மாதம் கணக்கிடப்படுகிறது. சூரிய உதயத்திற்கு முன்பு துவங்கி, சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு இஸ்லாமியர்கள் நோன்பினை, இஃப்தார் விருந்துடன் நிறைவு செய்கிறார்கள்.
ஒரு மாத காலம் பகல் பொழுதில் உணவு, தண்ணீர் எடுத்துக் கொள்ளாமல், இறை வழிபாட்டில் மட்டுமே மனத்தை செலுத்தி, மிக கடுமையாக ரமலான் நோன்பினை கடைபிடிக்கிறார்கள். இம்மாதத்தின் முதல் 10 நாட்கள் இறைவனின் ரஹ்மத் ஆகவும், நடுப்பகுதி பாவமன்னிப்பாகவும், கடைப்பகுதி நரக நெருப்பிலிருந்து விடுதலை பெறுவதாகவும் அமைகிறது என்பது நம்பிக்கை.
ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் இந்த நல்ல நாளில் இஸ்லாமிய பெருமக்களுக்கும் சகோதரர்களுக்கும் அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

வாழ்வில் வசந்தம்
வளர்பிறையாய் வளரட்டும்
துன்பங்கள் தேய்பிறையாய் தேயட்டும்
இன்பங்கள் நிறைந்த
இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள்

இறைவனை வேண்டுங்கள்
இல்லை என்று சொல்லாமல்
கேட்டதை வாரி வழங்குவார்
பிறை தெரியும் இந்த நல்ல நாளில்
மகிழ்ச்சி நிறைந்த ரம்ஜான் வாழ்த்துக்கள்

நோன்பிருந்து இறைவனை வேண்டி..
இல்லாதவர்களுக்கு வாரி வழங்கி..
உறவுகளுடனும்..நட்புகளுடனும்
அன்பை பரிமாறி..
இறைவனை தொழும்
இனிய சொந்தங்களுக்கு
இனிய ரம்ஜான் பெருநாள் நல் வாழ்த்துக்கள்

பிறை கண்டு
பெரு மகிழ்ச்சி கொண்டு
ஈகை திருநாளை கொண்டாடும்
இஸ்லாமிய சொந்தங்களுக்கு
இனிய ரமலான் பெருநாள்
நல் வாழ்த்துக்கள்!

ஈத் முபாரக்!
ஒற்றுமையோடு இறைவனை வணங்கி
அன்பால் ஆரத்தழுவி
பாசத்தோடு வாழ்த்துக்களை கூறி
ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடும்
இஸ்லாமிய உறவுகளுக்கு
இனிய ரமலான் நல் வாழ்த்துக்கள்!
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications