தென்சென்னை-இல.கணேசன்; வடசென்னை-தமிழிசை; நெல்லை-பொன். ராதாகிருஷ்ணன் போட்டி?
சென்னை: லோக்சபா தேர்தலில் கூட்டணி இறுதியாக நிலையிலும் 12 தொகுதிகளை குறிவைத்து வியூகங்களை வகுத்து வருகிறது பாஜக.
பாஜகவுடன் தற்போதைய நிலையில் மதிமுக கூட்டணி அமைத்துள்ளது. பாமகவுடன் பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது. தேமுதிக என்ன முடிவை எடுக்கும் எனத் தெரியவில்லை.
இந்நிலையில் கன்னியாகுமரி, தென்காசி, தென்சென்னை, சிவகங்கை, திருச்சி, மயிலாடுதுறை, வட சென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி ஆகிய 12 தொகுதிகளில் களம் இறங்க பாஜக முடிவு செய்துள்ளது.

கன்னியாகுமரி அல்லது நெல்லை
இதில் கன்னியாகுமரியில் கூடங்குளம் உதயகுமார் ஆம் ஆத்மி வேட்பாளராக போட்டியிட்டால் பாதிப்பு ஏற்படும் என்பதற்காக நெல்லையில் போட்டியிடலாமா என்பது குறித்தும் பாஜக ஆலோசித்து வருகிறது. இங்கு மாநில பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் போட்டியிடலாம்.

தென் சென்னையில் இல. கணேசன்
இதில் பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் தென் சென்னையில் போட்டியிடக் கூடும் எனத் தெரிகிறது.

வடசென்னைக்கு தமிழிசை
பாஜகவை பொறுத்தவரை வடசென்னையில் தமிழிசை சவுந்தர்ராஜனை நிறுத்த விரும்புகிறது. ஆனால் அவரோ ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு குறிவைத்திருக்கிறாராம்.

கோவைக்கு சிபி.ராதாகிருஷ்ணன், வானதி போட்டி
கோவை தொகுதியை கட்சியின் மூத்த தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் குறி வைத்திருக்கின்றனராம். இருவரும் இத்தொகுதியை எப்படியாவது பெற்றுவிடுவது என்பதில் மும்முரம் காட்டுகின்றனராம்.

தென்காசி
தென்காசியில் அய்யாவழி ஸ்ரீகுரு சிவச்சந்திரன் நிறுத்தப்படுவார் என்று கூறப்படுகிறது.

சிவகங்கை ஹெச். ராஜா
சிவகங்கையில் ஹெச். ராஜா நிறுத்தப்பட இருக்கிறாராம்.

சேலத்தில் லலிதா குமாரமங்கலம்
சேலத்தில் மூத்த தலைவர் லலிதா குமாரமங்கலத்தை நிறுத்தவும் பாஜக விரும்புகிறதாம்.

மோடி ஆதரவுடன் திருப்பூர் மணி?
இதேபோல் குஜராத்தில் தொழிற்சாலைகள் வைத்துள்ள தொழில் அதிபர் பாயிண்ட் மணி திருப்பூரில் மோடி ஆதரவுடன் களமிறக்கப்படலாம் எனத் தெரிகிறது.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications