தமிழக காங். மீண்டும் உடைகிறது.... இளங்கோவனுக்கு ஆதரவாக 38 மாவட்ட தலைவர்கள் ராஜினாமா?
சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு ஆதரவாக 38 மாவட்ட தலைவர்கள் பதவி விலகப் போவதாக அறிவித்துள்ளனர். இதனால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி மீண்டும் உடையும் நிலை உருவாகி உள்ளது.
தமிழக காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜி.கே.வாசன் வெளியேறி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் திமுக அணியிலும், தமாகா, மக்கள் நலக் கூட்டணி- தேமுதிக அணியிலும் இடம்பெற்றது.

சட்டசபை தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து இளங்கோவன் ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா கடிதம் டெல்லி மேலிடத்தில் ஏற்கப்படுமா? அல்லது ஏற்கப்படாதா? என்பது இன்னும் உறுதியாகவில்லை.
இந்த நிலையில் இளங்கோவன் ராஜினாமா கடிதம் கொடுத்ததாக வெளியான தகவல் கட்சியினரிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இளங்கோவன் ஆதரவு மாவட்ட தலைவர்களான மத்திய சென்னை ரங்கபாஷ்யம், காஞ்சி வடக்கு வி.ஆர்.சிவராமன் உட்பட 38 மாவட்ட தலைவர்கள் இன்று மணப்பாக்கத்தில் உள்ள இளங்கோவன் வீட்டில் கூடினார்கள். அவர்கள் அனைவரும் மாவட்ட தலைவர் பதவியையும் ராஜினாமா செய்யப் போவதாக இளங்கோவனிடம் தெரிவித்தனர். ஆனால் இளங்கோவன் அவர்களை சமாதானப்படுத்தினார்.
அத்துடன், நானாகத்தான் பதவியை ராஜினாமா செய்திருக்கிறேன். மேலிடம் என்னை திருப்பி அழைத்தாலும் தலைவர் பதவியில் நீடிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நேரத்தில் யாரும் கட்சிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டாம். அது கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் எனக் கூறியுள்ளார். இதனால் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஒரு பிளவை சந்திக்கும் நிலையில் உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications