கருணாநிதி குடும்பத்துல மட்டும் இல்லீங்க... ஜெ.வின் கார்டனிலும்தான் கெட்டி மேள 'ஓசை'

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி குடும்பத்தில் கல்யாண ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்தில் இளவரசி மகன் விவேக்கு திருமண ஏற்பாடுகள் களைகட்டி வருகிறது.

கருணாநிதியின் கொள்ளு பேரனான, மு.க. முத்துவின் மகள் தேன்மொழியின் மகன் மனு ரஞ்சித்துக்கும் நடிகர் விக்ரம் மகள் அக்ஷிதாவுக்கும் ஜூலை மாதம் திருமணம் நடைபெற உள்ளது. இத்திருமணம் மூலம் கருணாநிதி குடும்பத்தில் ஒரு அங்கத்தினராகிறார் நடிகர் விக்ரம்.

Elavarasi's son to get hitched

இதேபோல் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்தில் வசித்து வரும் இளவரசியின் மகன் விவேக் ஜெயராமனுக்கும் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்று வருகிறது. விவேக் குழந்தையாக இருந்த போதிருந்தே அவர் மீது ஜெயலலிதா மிகவும் பாசத்துடன் இருந்து வந்தாராம்...

ஜாஸ் சினிமாவின் சி.இ.ஓவாக தற்போது இருக்கிறார் விவேக். அவரது திருமணத்தை உற்சாகமாக நடத்துவதில் ஆர்வமுடன் இருக்கிறார் ஜெயலலிதா என்கிறது கார்டன் வட்டாரங்கள். மன்னார்குடியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரது மகளைத்தான் விவேக்குக்கு பேசி முடித்திருக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்னர் ஈக்காட்டுதாங்கலில் உள்ள திவாகரன் வீட்டில்தான் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாம்.

இத்திருமணத்தை ஜெயலலிதா முன்னின்று நடத்த உள்ளாராம். அனேகம் ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெறக் கூடும் என கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+