ஓட்டுப் போட தூக்கி வந்த பாட்டியை வாசலோடு போட்டு விட்டுப் போன அதிமுகவினர்!
சென்னை: வாக்காளர்களின் காலில் விழுவார்கள், கையைப் பிடிப்பார்கள், தாடையைப் பிடித்துத் தடவுவார்கள், பாசமாக பேசுவார்கள். வேண்டியதைச் செய்கிறோம் என்று வசனம் பேசுவார்கள்.. ஆனால் வாக்குப் பதிவு முடிந்துதம் ஒரு நாய் கூட நம்மைச் சீண்டாது.
அதை இன்று ஓட்டுச் சாவடியிலேயே மக்கள் பார்த்து அதிர்ந்து போனார்கள்.

ஆர்.கே.நகரில் இன்று இடைத் தேர்தல் வாக்குப் பதிவு நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு வாக்களித்தனர். பல மூதாட்டிகள், வயதானவர்களை ஆட்டோக்களிலும், தோளில் போட்டு தூக்கியும் கூட்டி வந்தனர் பலர்.
அதிமுகவினர் பலர் வயதானவர்களை, முடியாதவர்களை ஆட்டோ வைத்து அழைத்து வந்தனர். ஆனால் ஓட்டுப் போடும் வரைதான் அவர்களுக்கு செம கவனிப்பு இருந்தது. ஓட்டுப் போட்டு முடித்ததும் அத்தனை பேரையும் அப்படி அப்படியே விட்டுச் சென்று விட்டனர்.
ஜீவா நகரில் உள்ள வாக்குச்சாடிக்கு வயதான மூதாட்டி ஒருவரை ஆட்டோவில் அழைத்து வந்த அதிமுகவினர், அவர் வாக்களித்ததும் அவரை அப்படியே விட்டு சென்றுள்ளனர். எவ்வளவோ சொல்லியும், சரியாக கண் தெரியாமலும் வயதான காலத்தில் உடல் முடியாமலும் இருந்த பாட்டியை அதிமுகவினர் அழைத்து வந்தனர். ஓட்டு போட்டு முடித்ததும் அப்படியே விட்டுப் போய் விட்டனர் என்றார் அவருடன் வந்தவர்.
பின்னர் அந்தப் பாட்டியை ஒரு ஆட்டோ பிடித்து நக்கீரன் பத்திரிகையாளர்கள் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications