தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களில் அரசின் சாதனைகளை விளம்பரம் செய்ய தடை!

மத்திய பிரதேசத்தில் நவம்பர் 25-ந்தேதியும், ராஜஸ்தானில் டிசம்பர் 1-ந்தேதியும், டெல்லி, மிசோரமில் டிசம்பர் 4-ந்தேதியும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
மேலும், சத்தீஷ்கர் மாநிலத்தில் நவம்பர் 11 மற்றும் 19- ந்தேதியில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்றும் ஏற்காடு இடைத்தேர்தல் டிசம்பர் 4-ந்தேதி நடைபெறும் என்றும் தலைமை தேர்தல் அதிகாரி சம்பத் அறிவித்துள்ளார்.
சத்தீஷ்கர் மாநில முதல் கட்ட தேர்தலுக்கான மனு தாக்கல் அக்டோபர் 18-ந்தேதி தொடங்கி 25-ந்தேதி வரை நடைபெறும். மனுமீதான பரிசீலனை அக்டோபர் 26-ந்தியும், மனு வாபஸ் பெற அக்.28-ந்தேதி கடைசி நாளாகும்.
2-ம் கட்ட தேர்தலுக்கான மனுதாக்கல் அக்.25-ந்தேதி தொடங்கி நவ.1-ந்தேதி வரை நடைபெறும். மனு மீதான பரிசீலனை நவ.2-ந்தேதியும், மனு வாபஸ் பெற நவ.4-ந்தேதி கடைசி நாளாகும்.
மத்திய பிரதேசத்தில் மனுதாக்கல் நவ.1-ந்தேதி தொடங்கி 8-ந்தேதி வரை நடைபெறும். நவ. 9-ந்தேதி மனு பரிசீலனையும், மனு வாபஸ் நவ.11-ந்தேதி கடைசி நாளாகும்.
ராஜஸ்தானில் நவம்பர் 5-ந்தேதி மனுதாக்கல் தொடங்கி 12-ந்தேதி வரை நடைபெறுகிறது. 13-ந்தேதி மனு மீதான பரிசீலனையும், 16-ந்தேதி வாபஸ் பெற கடைசி நாளாகும்.
டெல்லி மற்றும் மிசோரமில் நவ.9-ந்தேதி மனு தாக்கல் தொடங்கி 16-ந்தேதி வரை நடைபெறும். 18-ந்தேதி மனு மீதான பரிசீலனையும், 18-ந்தேதி வாபஸ் பெற கடைசி நாளாகும்.
டிசம்பர் 8-ந்தேதி 5 மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது
இந்த தேர்தல்களில் மத்திய - மாநில அரசுகள் நிறைவேற்றியுள்ள திட்டங்கள் தொடர்பாக யாரும் விளம்பரம் செய்ய கூடாது என தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக அனைத்து மாநிலங்களை சேர்ந்த தலைமை செயலாளர்களுக்கு தேர்தல் கமிஷன் அனுப்பியுள்ள கடிதத்தில், ‘இதைப் போன்ற விளம்பரங்கள் மத்தியில் ஆளும்கட்சிக்கு சாதகமான தேர்தல் முடிவை தந்துவிடும் என்பதால் அவற்றை தவிர்க்க வேண்டும்' என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் சில மாநில அரசுகள் மத்திய அரசு நிறைவேற்றியுள்ள நலத்திட்டங்கள் தொடர்பாக டெல்லி ஊடகங்களில் விளம்பரங்கள் அளித்ததையடுத்து தேர்தல் கமிஷன் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக நடக்கும் மினி பொதுத் தேர்தலாக இந்த 5 மாநில தேர்தல்கள் கருதப்படுகின்றன.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications