ஆர்கே நகர் இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு மோசம்.. மக்கள் ஆய்வு சர்வே பரபர!
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு மோசமாக உள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஆர்கே நகர் இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு மோசமாக உள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பேராசிரியர் ராஜநாயகம். இவர் தலைமையில் மக்கள் ஆய்வு என்ற டீம் செயல்பட்டு வருகிறது.
இவர்கள் அவ்வப்போது தமிழகத்தில் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு அரசியல் கட்சிகளுக்கு பீதியளித்து வருகின்றனர். இந்நிலையில் அனைவராலும் உற்றுநோக்கப்படும் ஆர்கே நகர் இடைத்தேர்தல் குறித்து இவர்களின் டீம் ஒரு கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது.

மக்கள் ஆய்வு கருத்துக்கணிப்பு
ஆர்கே நகரில் இன்றைய தேதியில் தேர்தல் நடத்தினால் யார் வெற்றி பெறுவார்கள், அக்கறையுள்ள நடிகர்கள் யார், முழுநேர அரிசியலுக்கு வந்தால் எந்த நடிகர் வெற்றி பெறுவார் என்பது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் கருத்துக்கணிப்பு நடத்தினர்.

தேஆ செயல்பாடு மோசம்
அதன் ஒரு பகுதியாக ஆர்கே நகர் இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு எப்படி உள்ளது என்றும் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு மோசமாக உள்ளது என 64.8 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

சொல்லிக்கொள்ளும்படி எதுவுமில்லை
தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்படவில்லை என பெரும்பாலானோர் தெரிவித்துள்ளனர். தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு சிறப்பாக உள்ளது என 18 சதவீதம் பேரும் சொல்லிக்கொள்ளும்படி எதுவுமில்லை என 17.2 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.

தொலைக்காட்சிக்கு முதலிடம்
அரசியல் செய்திக்கான முதன்மை ஊடகமாக ஆர்கே நகர் மக்களின் ஏகோபித்த ஆதரவை தொலைக்காட்சி பெற்றிருப்பதாக அந்தக் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சி 85.6 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது.

கைப்பேசிக்கு மூன்றாமிடம்
இளைஞர்களிடமும் தொலைக்காட்சியே செல்வாக்கு பெற்றிருப்பதாகவும் அந்த சர்வேயில் தெரியவந்துள்ளது. செய்தித்தாள் 8.9 சதவீத வாக்குகளையும் கைப்பேசி 3.2 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளதாக மக்கள் ஆய்வு கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications