சட்டசபை தேர்தலையொட்டி டிஜிபி அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ள நிலையில் சென்னை டிஜிபி அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற உள்ளது. இத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
அதையொட்டி, தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை காவல்துறை தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக சென்னை மயிலாப்பூரில் உள்ள தமிழக காவல்துறை டிஜிபி அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கட்டுப்பட்டு அறையில் ஒரு ஐ.ஜி, ஒரு எஸ்.பி, 2 ஏடிஎஸ்பிக்கள், 2 டிஎஸ்பிக்கள், 6 இன்ஸ்பெக்டர்கள் பணியமர்த்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. சட்டசபை தேர்தலுக்கான தேதிகள் விரைவில் வெளியாக உள்ள நிலையில் இந்த முன்னேற்பாடு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை, வாக்கு என்னும் மையங்களின் எண்ணிக்கை, பதற்றமான வாக்குச் சாவடிகள், கடந்த சட்டசபை தேர்தலில் வாக்குச் சாவடி அமைக்கப்பட்ட இடங்கள், பாதுகாப்புப் பணிக்கு தேவையான காவலர்கள் எண்ணிக்கை போன்ற தகவல்களைத் திரட்டி வருகின்றனர்.
தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications