மின்னணு வாக்கு பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறையின் சீல் வெயிலால் உருகியது- கடலூரில் பரபரப்பு
கடலூர்: கடலூர் லோக்சபா தொகுதியில் ஓட்டுப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்கு பதிவு எந்திரங்கள் கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள அரசு பெரியார் கலை கல்லூரியில் உள்ள அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
தேர்தல் பார்வையாளர் மற்றும் வேட்பாளர்கள், ஏஜெண்டுகள் முன்னிலையில் அந்த அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. அந்த கல்லூரிக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சி.சி.டி.வி கேமரா மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கல்லூரியில் 2 ஆவது மாடியில் திட்டக்குடி, விருத்தாசலம் தொகுதி ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்கு வைக்கப்பட்டிருந்த "சீல்" நேற்று திடீரென்று வெயில் வெப்பம் தாங்காமல் உருகியது.
அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த துணை ராணுவத்தினர் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் கலெக்டர் கிர்லோஷ்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் அங்கு விரைந்து வந்து பார்வையிட்டார்.
அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்று அவர் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications