குற்றாலத்தில் வெள்ளம்.. நீரில் அடித்து வரப்பட்ட யானை உயிரிழப்பு! சோகத்தில் தென்காசி
தென்காசி: குற்றாலத்தில் வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட யானை ஒன்று உயிரிழந்த சம்பவம் தென்காசியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரை ஒதுங்கியுள்ள யானையின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அடக்கம் செய்யப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் பெய்யும் கனமழையானது வட கடலோர மாவட்டங்களையும், தென் மாவட்டங்களையும் குறி வைத்து வருகிறது. கடந்த ஆண்டு திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த கனமழை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது தென் மாவட்டங்களுக்கு நல்ல மழையை கொடுத்தது.

காற்றழுத்த தாழ்வு பகுதி இடையில் வலுப்பெற்றதால் மழையின் தீவிரம் கூடியிருக்கிறது. இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசியில் மிக கனமழை பொழிந்திருக்கிறது. திருநெல்வெலியில் மட்டும் கடந்த அக்.1ம் தேதி தொடங்கி நேற்று வரை 663.5 மி.மீ அளவுக்கு மழை பெய்திருக்கிறது. இந்த காலத்தின் இயல்பான மழை அளவு 456.8 மி.மீதான். ஒப்பிட்டு பார்த்தால் இந்த ஆண்டு 45% அதிக மழையை நெல்லை மாவட்டம் பெற்றிருக்கிறது.
கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. நகர பகுதியில் பழைய பேருந்து நிலையம், காட்சி மண்டபம் சாலை, முகமது அலி தெரு, கே.சி.டி நகர் கீழநத்தம் உள்ளிட்ட பகுதிகள் கனமழையால் வெள்ளக்காடாக மாறியது. மறுபுறம் தூத்துக்குடியையும் மழை விட்டு வைக்கவில்லை. ஏரல் தரைப்பாலத்தை மூழ்கடித்து செல்லும் வெள்ளம் காரணமாக தூத்துக்குடி-காரநரசேத் சாலை துண்டிக்கப்பட்டிருக்கிறது.
தென்காசியில் வரலாறு காணாத மழை பதிவாகியுள்ளது. நேற்று முன்தினம் தொடங்கி நேற்று அதிகாலை வரை 29 மணி நேரம் மழை இடைநில்லாமல் பெய்திருந்தது. இதனால் குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குற்றாலம் மெயின் அருவியில் ஏற்பட்ட வெள்ளம், குற்றாலநாத சுவாமி கோயிலுக்குள் புகுந்தது. மட்டுமல்லாது அருவியை ஒட்டியுள்ள சன்னதி தெருவிலும் வெள்ளம் கரைப்புரண்டு ஓடியது. இதனால் அங்கிருந்த கடைகள் பல கடுமையாக சேதமடைந்தன.
வெள்ளம் காரணமாக தாழ்வான பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள், பைக்குகள் சில நீரில் அடித்து செல்லப்பட்டன. வெள்ளம் விளை நிலங்களுக்குள் புகுந்ததால் நெற்பயிற்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மட்டுமல்லாது பல்வேறு இடங்களில் இன்னும் மின்சாரம் வழங்கப்படவில்லை.
இப்படி இருக்கையில் குற்றாலத்தில் வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட யானை ஒன்று சடலமாக மீட்கப்பட்டிருக்கிறது. யானைக்கு சுமார் 4 வயது இருக்கலாம் எனறும் உடல் உப்பிய நிலையில் சடலம் இருப்பதால் 2 நாட்களுக்கு முன்னரே யானை இறந்திருக்கலாம் என்றும் வனத்துறையினர் கூறியுள்ளனர். இருப்பினும் யானையின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னரே அடக்கம் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications