ஜாலியாக விளையாடும் வேதநாயகி, ஹாயாக கிளம்பிய பிரக்ருதி.. கலகல யானைகள் முகாம்!
மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடந்து வரும் யானைகள் முகாம் களை கட்டத் தொடங்கியுள்ளது. கேம்ப்பில் முகாமிட்டுள்ள யானைகள் எந்தப் பஞ்சாயத்தும் பண்ணாமல் படு குஷியாக இயற்கை சூழலை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனவாம்.
குறி்ப்பாக காலில் புண்ணுடன் வந்த ஈரோடு மாவட்டம் பவானி சங்கமேஸ்வர் கோவில் யானை வேதநாயகி தற்போது புண் சரியாகி, படு குஷியாக ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறதாம்.
இதேபோல பிற யானைகளும் கூட குஷியாக முகாமில் நடை போட்டுக் கொண்டிருக்கின்றனவாம்.

தேக்கம்பட்டி முகாம்
ஆண்டுதோறும் தேக்கம்பட்டியில் புத்துணர்வு முகாம் யானைகளுக்காக நடத்தப்படுகிறது.

ஜெயலலிதா உத்தரவுப்படி
முதல்வர் ஜெயலலிதாவின் ஐடியாதான் இந்த யானைகள் முகாம். இந்த முகாம் கோவில் யானைகளுக்கு நல்ல புத்துணர்வு கொடுப்பதால் அதிமுக ஆட்சியின்போது தவறாமல் இந்த முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

கோவில் யானைகள்
இந்த முகாமில் கோவில் யானைகள் பலவும் பங்கேற்று மகிழ்ச்சி அடைவது வழக்கம். இந்த ஆண்டும் கோலாகலமாக தொடங்கி நடந்து வருகிறது முகாம்.

வேதநாயகியின் உற்சாகம்
இந்த முகாமில் ஈரோடு மாவட்டத்தில் இருந்து ஒரே ஒரு கோவில் யானையாக, பவானி சங்கமேஸ்வரர் கோவில் யானை வேதநாயகி பங்கேற்றுள்ளது.

புண்ணோடு வந்து புன்முறுவலோடு உற்சாகம்
முகாமுக்கு வருவதற்கு முன்பே வேதநாயகிக்கு காலில் புண் இருந்தது. ந்த புண்ணுக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்தனர். புண் ஆறி முகாமுக்கு செல்ல வேதநாயகி தயார் ஆனது.

லாரியில் ஏறி ஜாலி வலம்
உற்சாகத்துடன் லாரியில் ஏறி புறப்பட்டு புத்துணர்வு முகாமுக்கு சென்றது. முகாமில் பங்கேற்ற வேதநாயகிக்கு அங்கு மீண்டும் காலில் லேசாக புண் ஏற்பட்டது. அங்கு தயாராக இருந்த டாக்டர்கள் குழுவினர் வேதநாயகிக்கு தேவையான சிகிச்சை அளித்தனர்.

குதியாட்டம்.. ஜாலி விளையாட்டு
இந்த சிகிச்சைக்கு பிறகு யானை மேலும் உற்சாகம் அடைந்தது. இதனால் மற்ற கோவில் யானைகளுடன் ஜாலியாக சேர்ந்து விளையாடுகிறது. பவானி ஆற்றில் மற்ற யானைகளுடன் குதூகலமாகவும் விளையாடுகிறது.
திருநள்ளாறு கோவில் யானை பிரக்ருதி புத்துணர்வு முகாமுக்கு புறப்பட்டு சென்றது

புதுவையிலிருந்து லட்சுமி
இதேபோல புதுவையிலிருந்தும் யானைகள் வந்துள்ளன. அங்குள்ள பிரபலமான மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமியும் கேம்ப் அடித்துள்ளது.

திருநள்ளாறிலிருந்து பிரக்ருதி
இதேபோல திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலை சேர்ந்த பெண் யானை பிரக்ருதியையும் தற்போது அனுப்பி வைத்துள்ளனர்.

சிறப்பு பூஜையுடன்
இன்று காலை திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் ஒரு லாரியில் பிரக்ருதி யானையை ஏற்றி தேக்கம்பட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த யானையுடன் 2 பாகன்களும் புறப்பட்டுப் போயுள்ளனர்.












Click it and Unblock the Notifications