வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புத் திட்டம்! கலெக்டர்களுக்கு ஸ்டாலின் கட் அண்ட் ரைட் உத்தரவு!
விழுப்புரம்: வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புத் திட்டங்களை மாவட்ட ஆட்சியர்கள் தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
"கள ஆய்வில் முதலமைச்சர்" திட்டத்தின் கீழ், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், அரசு உயர் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்திய அவர் இதனைக் கூறியிருக்கிறார்.
மேலும், அந்தக் கூட்டத்தில் இது தொடர்பாக ஆற்றிய உரை வருமாறு;

''தொழில் வளர்ச்சிக்காக அரசு புதிய தொழில் முதலீடுகளை கொண்டு வந்துகொண்டிருப்பதை அறிவீர்கள். அதே சமயம், புதிய சிறுதொழில் முனைவோர்களுக்கு ஊக்கம் அளிக்கும் திட்டங்களை குறிப்பாக தாட்கோ நிதி உதவி -வங்கிக் கடன், நீட்ஸ் - வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புத் திட்டம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர்கள் தீவிரமாக செயல்படுத்த வேண்டும்.
என்னுடைய காலத்தில் இந்த மாவட்டத்தில் இந்த திட்டத்தை முடித்துக் காட்டினேன்- என்று உங்களுக்கு பெயர் வாங்கித்தரும் அளவுக்கு முடித்துக் காட்டுங்கள்.
ஒரு மனிதனின் மனதிருப்திக்கு இணையான மகிழ்ச்சி வேறு எதுவும் இருக்க முடியாது. அத்தகைய மனநிறைவைப் பெறும் அளவுக்கு ஒவ்வொரு திட்டத்தையும் நீங்கள் செயல்படுத்திக் காட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இதுபோன்ற கூட்டுக் கூட்டங்களின் மிக முக்கியமான பயன் ஒருங்கிணைப்பு ஆகும். அலுவலர்கள் அனைவரையும் ஒரு சேர சந்திப்பது என்பது மிகமிக முக்கியமானது.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையை கவனித்து வந்தாலும், யாரும் தனியாகச் செயல்பட இயலாது. ஒன்றோடு ஒன்று இணைந்தவைதான் அரசுத் துறைகள்.
உங்களிடம் இருந்து நாங்கள் எதிர்பாரப்பது என்பது, அறிவிக்கப்பட்ட திட்டம் விரைந்து துவக்கப்பட்டு, குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்கப்பட வேண்டும். எல்லாப்பணிகளும் தரமானதாக, முழுமையானதாக நிறைவேற்றிக் காட்ட வேண்டும்.
இதனைத்தான் மாவட்ட ஆட்சியரிடமும்; மாவட்ட நிலை அலுவலர்களிடமும் எதிர்பார்க்கின்றோம். அதற்குத் தேவை தொடர்ச்சியான கண்காணிப்பு.''
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications