மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்.. சென்னைக்கு போஸ்டர் போட்டு கெளரவம் சேர்க்கும் 'எம்பவர் பேஜஸ்'!
சென்னை: ஒரு காலத்தில் பிரமிப்பூட்டிய பிரமாண்ட நகரம் சென்னை. இன்று அந்த "அச்ச உணர்வு" பலருக்குப் போய் விட்ட போதிலும், இன்னும் கூட அந்த பிரமிப்பு மாறாமல் அப்படியேதான் இருக்கிறது. இன்னும் சொல்ல வேண்டும்னால் பிரமாதமாக மாறிப் போயிருக்கிறது சென்னை.
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் என்ற பாட்டாகட்டும், பாரப்பா பழனியப்பா பட்டணமாம் பட்டணமாம் என்ற பாட்டாகட்டும்.. மெட்ராஸை சுத்திப் பார்க்கப் போறேனாகட்டும்.. எல்லாமே மெட்ராஸின் புராணம் பாடும் பாடல்கள்தான்.
இன்று மெட்ராஸ் சென்னை என்று மாறிப் போன போதும் கூட மெட்ராஸின் வாசம் இன்னும் மக்கள் மனதில் பாசத்துடன் வீசிக் கொண்டுதான் இருக்கிறது.

கெளரவம் சேர்க்கும் எம்பவர் பேஜஸ்
இந்த நிலையில் சென்னையின் முக்கிய அடையாளங்களை வைத்து அந்த நகருக்கு கெளரவம் சேர்க்கும் வேலையில் இறங்கியுள்ளது எம்பவர் பேஜஸ் என்ற மார்க்கெட்டிங் மற்றும் விளம்பர நிறுவனம்.

சென்னையின் அடையாளங்கள்
சென்னையின் அடையாளங்களாக கருதப்படும் பாரி முனை, தி.நகர், அண்ணா சாலை, பெசன்ட் நகர் பீச், மெரீனா பீச், டிடிகே சாலை, செளகார்பேட்டை, வண்டலூர், கிண்டி ஆகியவற்றுக்கு கெளரவம் சேர்க்கும் வகையில் போஸ்டர் போட்டுள்ளனர் இவர்கள்.

அண்ணா சாலை
அண்ணா சாலை என்றதும் நினைவுக்கு வருவது அதன் அனுமார் வால் போல நீண்ட போக்குவரத்துதான். இதைக் குறிப்பிட்டு காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 9 மணி வரையிலும் போக்குவரத்து அதிகமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளனர். பின்னணியில் வாகனக் கூட்டம்.

பாரிமுனை
பெயர் படா சொகுசானதாக இருந்தாலும், சீப்பான விலையில் பொருட்களை வாங்கும் இடம் பாரிமுனை என்று குறிப்பிட்டு பாரீஸ் நகரின் ஈபிள் டவர் படத்தையும் போட்டுள்ளனர். அந்த ஈபிள் டவரின் விலை ரூ. 100 மட்டுமே என்று டேக் போட்டிருப்பது சுவாரஸ்யமான விஷயம்.

தி.நகர்
தியாகராய நகர் என்று யாரும் சொல்தில்லை. தி. நகர்தான். ஷாப்பிங் மற்றும் ஓவர் டோஸ் மக்கள் புழங்கும் இடம் தி.நகர் என்று இந்த போஸ்டர் சொல்கிறது.

எல்லாம் இங்கதான்
பெசன்ட் நகர் பீச். டேட்டிங் நடப்பதெல்லாம் இங்குதான் என்பது இந்தப் பகுதியின் அடையாள பன்ச்சாக காட்டப்பட்டுள்ளது.. உண்மையும்.. முதல் டேட்டிங்கை பலர் இங்கு ஆரம்பித்திருப்பார்கள்.. மலரும் நினைவுகள் வருகிறதா??

மெரீனா பீச்
இதற்கு அறிமுகம் தேவையில்லை. உலகின் மிக நீளமான கடற்கரை.. காதலும் இங்குதான் பூக்கிறது என்பது இதற்கான டேக்காக உள்ளது.

டிடிகே சாலை
அருமையான உணவுக்கு இந்தப் பக்கம் விசிட் அடியுங்கள்.. ராயல் சான்ட்விச் கடைக்கும் இங்கு வரவும் என்பது இந்த போஸ்டர் சொல்லும் செய்தி.

செளகார்ப்பேட்டை
அண்ணாக்கள் பையாக்களாகும் பகுதி.. எல்லோரும் சய்யா சய்யா பாடும் பகுதி.. நல்ல அழகான அறிமுகம்தான் சேட்ஜி!

வண்டலூர்
எல்லோரும் ஜோடி ஜோடியாக வந்து தங்களது "உறவினர்களை" சந்திக்கும் இடமாக வண்டலூர் காட்டப்படுகிறது. என்ன புரிகிறதா??

கிண்டி
பட்டர்பிளை போல காணப்படும் பாலம்... ரயில் பூச்சி போல ஊர்ந்து செல்லும் போக்குவரத்து நெரிசல்.. ஆமை வேகத்தில் நகரும் வாகனங்கள்... இதுதான் கிண்டியின் அடையாளம்.
சுவாரஸ்யமாகத்தான் இருக்கின்றன போஸ்டர்கள்.. விசில் போடலாம்...!
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்












Click it and Unblock the Notifications