நடிகர் மாதவனுக்கு நிலத்தை விற்பனை செய்ய கொடைக்கானல் விவசாயிகளை மிரட்டும் அதிகாரிகள்- பரபரப்பு புகார்
திண்டுக்கல்: கொடைக்கானல் மலைப்பகுதியில் பாசன வாய்க்கால், புறம்போக்கு நிலத்தை நடிகர் மாதவன் ஆக்கிரமித்துள்ளதாகவும் அவருக்காக நிலத்தை விற்பனை செய்ய வேண்டும் என்று அதிகாரிகளே நெருக்கடி கொடுப்பதாகவும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் விவசாயிகள் பரபரப்பு புகாரைத் தெரிவித்துள்ளனர்.
கொடைக்கானல் மலைக்கு வத்தலகுண்டு வழியாகவும் பழனி வழியாகவும் செல்லும் இரு பிரதான பாதைகள் உள்ளன. இந்த மலைப் பகுதியில் அரசியல் பிரமுகர்கள், திரை உலகைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் நிலங்களை வாங்கிப் போட்டுள்ளனர்.

இதில் பழனி- கொடைக்கானல் மலைப் பகுதியில் நிலம் வாங்கியிருக்கும் நடிகர் மாதவன் மீது விவசாயிகள் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் விவசாயிகளான மகாலட்சுமி, கணேசன் ஆகியோர் பேசியதாவது:
விலாங்கோம்பை அடுத்துள்ள தேக்கந்தோட்டம் பகுதியில் டிடிஎல் பாசன வாய்க்கால் உள்ளது. கொடைக்கானல் மலையிலிருந்து பழனி பகுதியில் உள்ள கண்மாய்களுக்குச் செல்லும் இந்த வாய்க்கால் மூலம் தேக்கந்தோட்டம் பகுதியில் 50 ஏக்கர் நஞ்சை நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன.
இந்நிலையில் தேக்கந்தோட்டம் பகுதியில் 7 ஏக்கர் நிலம் வாங்கியுள்ள திரைப்பட நடிகர் மாதன், 50 ஏக்கர் நிலங்களுக்கு தண்ணீர் செல்லும் வரத்து கால்வாயை ஆக்கிரமித்ததுடன், மின்வேலியும் அமைத்துள்ளார்.
இதனால் விவசாயிகளின் பாசன உரிமை பறிக்கப்பட்டுள்ளது. மேலும் விளைபொருள்களை வைப்பதற்கு பயன்படுத்தப்பட்டு வந்த களம் மற்றும் புறம்போக்கு நிலங்களையும் அவர் ஆக்கிரமித்துள்ளார்.
நடிகர் மாதவனுக்கு ஆதரவாக அதிகாரிகளும் செயல்படுகின்றனர். அத்துடன் எங்கள் நிலங்களை விற்பனை செய்யச் சொல்லி நெருக்கடி கொடுத்தும் வருகின்றனர். இதனால் நடிகர் மாதவன் மீதும் அவருக்கு ஆதரவாக செயல்படும் அரசு அலுவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து வருவாய்த் துறை மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் ஹரிகரன் உத்தரவிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications