பொறியியல் கவுன்சிலிங் ரேண்டம் நம்பர் இன்று வெளியானது - தரவரிசைப் பட்டியல் ஜூன் 22ல் ரிலீஸ்
சென்னை: தமிழகத்தில் பொறியியல் படிப்பு கலந்தாய்விற்கான ரேண்டம் எண்ணை சென்னை அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது. தர வரிசைப் பட்டியல் வருகிற 22ம் தேதி வெளியிடப்பட உள்ளது. பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு 24ம் தேதி நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் என 583 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் சுமார் 2 லட்சம் இடங்கள் அண்ணா பல்கலைக் கழகத்தின் பொது கலந்தாய்வு மூலம் ஒற்றைச்சாளர முறையில் நிரப்பப்படுகின்றன. இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கு ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 722 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

பொறியியல் படிப்பு மாணவர்கள் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு ஜூன் 24ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், 10 இலக்க ரேண்டம் எண், அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட ரேண்டம் எண் விவரங்களை அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் அறிந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வரும் 22ம் தேதி வெளியிடப்பட உள்ளது. 24ம் தேதி விளையாட்டுப் பிரிவினருக்கும், 25ம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கும் கலந்தாய்வு நடத்தப்பட இருக்கிறது. ஜூன் 27ம் தேதி முதல் பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.
கலந்தாய்வுக்கான அழைப்பு கடிதம் இந்த ஆண்டு தபால் மூலமாக அனுப்பப்பட மாட்டது. எனவே, பல்கலைக்கழக இணையதளத்தில் பெயர், பிறந்தத் தேதி, பொறியியல் சேர்க்கை பதிவு எண் ஆகியவற்றை ஆன்-லைனில் பதிவு செய்து அழைப்புக் கடிதத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications