For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எஞ்சினியரிங் படிப்புக்கான விண்ணப்பங்கள் 1 லட்சத்திற்கும் மேல் விற்பனை

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் 600 க்கும் மேற்பட்ட எஞ்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இவை அனைத்தும் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்த கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவ, மாணவிகளை பி.இ படிப்பில் சேர்ப்பதற்காக கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்த உள்ளது.

அது தொடர்பாக மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்பம் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் உள்பட 60 இடங்களில் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த 3 ஆம் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 7 வேலை நாட்களில் ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 780 விண்ணப்ப படிவங்கள் விற்கப்பட்டுள்ளன. விண்ணப்பம் விற்கப்பட்ட விவரம் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 3 ஆம் தேதி 69 ஆயிரத்து 943 படிவங்களும், 5 ஆம் தேதி 48 ஆயிரத்து 593 படிவங்களும், 6 ஆம் தேதி 14 ஆயிரத்து 985 படிவங்களும், 7 ஆம் தேதி 9 ஆயிரத்து 884 படிவங்களும், 8 ஆம் தேதி 7242 படிவங்களும், 9 ஆம் தேதி 8497 படிவங்களும், 10 ஆம் தேதி 9 ஆயிரத்து 636 படிவங்களும் விற்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு ஒவ்வொரு கல்லூரியிலும் மாணவர்கள் சேர்ந்த கட்ஆப் மதிப்பெண் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

English summary
Totally 1 lakh 68 thousand engineering applications issued by Anna university for the BE admission.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X