20 தமிழர் படுகொலைக்கு எதிர்ப்பு... ஆந்திர கல்லூரியில் ஆசிரியர் பணியை தூக்கி எறிந்த தமிழக லெக்சரர்!
சென்னை: 20 தமிழகத் தொழிலாளர்களை ஆந்திர போலீஸார் கொடூரமாக சுட்டுக் கொன்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரவைச் சேர்ந்தவர்கள் நடத்தி வரும் பொறியியல் கல்லூரியில் வேலை பார்த்து வந்த விரிவுரையாளர் தனது பணியை ராஜினாமா செய்துள்ளார்.

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரம் வெட்ட வந்ததாகக் கூறி 20 தமிழர்களை கடந்த 7 ம் தேதி அம்மாநில சிறப்பு அதிரடிப்படை போலீஸார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர். கடத்தல்காரர்களை சுற்றி வளைத்தபோது, அவர்கள் தங்களை தாக்கியதாகவும் தற்காப்புக்காகவே துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் போலீஸார் தெரிவித்தனர். ஆனால், இது போலி என்கவுன்ட்டர் என்றும் திட்டமிட்டே தமிழர்கள் கொல்லப்பட்டனர் என்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகள், அமைப்புகள் கூறிவருகின்றன.
மேலும் ஆர்பாட்டம் மற்றும் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் என்கவுன்ட்டரில் இறந்தவர்களில் 8 பேர் திருவண்ணாமலை மாவட்டத்தையும் 8 பேர் விழுப்புரம் மாவட்டத்தையும் 4 பேர் வேலூர் மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள். இந்த சம்பவத்தை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
மானஸ்தன்
Posted by Ponnusamy Purushothaman on Wednesday, April 8, 2015
இந்த சம்பவத்தை கண்டித்து தமிழகத்தை சேர்ந்த என்ஜீனியரிங் கல்லூரி பேராசிரியர் அருண்குமார் (27) தனது பணியை ராஜினாமா செய்துள்ளார். திருவண்ணாமலை போளூரை சேர்ந்த இவர் எம் இ படித்துள்ளார். ஸ்ரீ பெரும்புதூரில் உள்ள ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் நடத்தி வரும் பொறியியல் கல்லூரியில் பணிபுரிந்து வந்தார்.
திருமணம் ஆகி சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வருகிறார். தமிழர்கள் திட்டமிட்டே கொல்லப்பட்டனர் என்று கூறி தனது பணியை ராஜினாமா செய்துள்ளார் அருண் குமார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications