”மரியாதையா எங்க பிரண்டை கல்யாணம் பண்ணிக்கோ” - கல்லூரி மாணவியை மிரட்டிய 8 பேருக்கு வலை
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் எஞ்சினியரிங் மாணவி ஒருவரை திருமணம் செய்யக் கோரி கொலை மிரட்டல் விடுத்த 8 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
மயிலாடுதுறை அருகே கோவங்குடி குடியானத்தெருவை சேர்ந்தவர் மோகன். இவருடைய மகன் பிரசாந்த். இவர், அதே பகுதியை சேர்ந்த 21 வயது எஞ்சினியரிங் கல்லூரி மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த மாணவி பிரசாந்தின் காதலை நிராகரித்தார்.

இந்தநிலையில் சம்பவத்தன்று அந்த மாணவி கல்லூரிக்கு சென்றபோது, பிரசாந்த் மற்றும் இவரது நண்பர்கள் திவாகர், ஹரிஹரன், வெங்கடேசன், மனோகர் ஆகிய 5 பேரும் சேர்ந்து பிரசாந்தை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும் பிரசாந்தை திருமணம் செய்து கொள்ளாவிட்டால் உனது முகத்தில் ஆசிட் ஊற்றிவிடுவோம் என்று மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
மேலும், இவர்களுக்கு ஆதரவாக அதே பகுதியை சேர்ந்த ரமேஷ், எஸ்.என். சேகர், சிவானந்தம் ஆகியோரும் செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெரம்பூர் போலீசில் மாணவி புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் குலோத்துங்கன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி மாணவி மீது ஆசிட் ஊற்றிவிடுவோம் என கொலை மிரட்டல் விடுத்த பிரசாந்த், திவாகர், ஹரிஹரன், வெங்கடேசன், மனோகர், ரமேஷ், சேகர், சிவானந்தம் ஆகிய 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வருகிறார்கள்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications