“கிரிஞ்சு”.. 0.5 ஸ்டார்! கேரளா ஸ்டோரி வெறும் “நயவஞ்சகமான வாட்ஸ்அப் மெசேஜ்”! கழுவி ஊற்றிய மீடியாக்கள்
சென்னை: பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் நேற்று வெளியாகி இருக்கும் நிலையில், அதற்கு ஐந்துக்கு 0.5 ஸ்டார் ரேட்டிங்கை மட்டுமே வழங்கி கடுமையாக விமர்சித்து இருக்கிறது பிரபல ஆங்கில தொலைக்காட்சியான NDTV.
கடந்த ஆண்டு விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தின் பாணியில், எதிர்ப்புகளால் கிடைக்கும் விளம்பரத்தை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட திரைப்படம் தி கேரளா ஸ்டோரி. எதிர்ப்பு விளம்பரம் மூலம் வசூல் வெற்றியை பெறலாம் என்று உருவாக்கப்பட்ட இப்படம், தற்போது கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.
சுதிப்தோ சென் இயக்கத்தில் அடா சர்மா, சித்தி இத்னானி, பிரணவ் மிஸ்ரா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் தி கேரளா ஸ்டோரி. கேரளாவில் பிற மதங்களை சேர்ந்த 32 ஆயிரம் பெண்கள் இஸ்லாமிய மதத்துக்கு மாற்றப்பட்டு பயங்கரவாத அமைப்புகளில் சேர்க்கப்படுவதாக அடிப்படை ஆதாரங்கள் இன்றி இப்படம் எடுக்கப்பட்டதாக இதன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.

கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் தொடங்கி பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புகளுக்கு மத்தியில், தடைகோரிய வழக்குகளை மீறி நேற்று தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இப்படம் போலீஸ் பாதுகாப்புடன் வெளியானது. கதை, தகவல்கள் அடிப்படையில் சர்ச்சைக்குரிய மாற்றுக் கருத்துக்கள் இருந்தாலும் தயாரிப்பில் ஏதாவது செய்து பொழுதுபோக்கு அம்சங்களை சேர்த்திருப்பார்கள் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சி உள்ளது.
திரைக்கதை, நடிப்பு, வசனங்கள், உருவாக்கம் என அனைத்துமே மோசமாக இருப்பதாக ரசிகர்களும், விமர்சகர்களும் தெரிவிக்கின்றனர். பிரபல ஆங்கில தொலைக்காட்சியான NDTV இந்த திரைப்படத்துக்கு 5 க்கு வெறும் 0.5 ஸ்டார் ரேட்டிங்கை மட்டுமே வழங்கி கடுமையாக விமர்சித்து உள்ளது. இந்த படத்துக்கு விமர்சனம் எழுதிய சாய்பால் சாட்டர்ஜீ, இதனை மிகவும் மோசமான திரைப்படம் என்று விமர்சித்து உள்ளார். உண்மைகளோடு விளையாடாமல் இருந்து இருந்தால் சில பொழுதுபோக்காவது அதில் கிடைத்திருக்கும் என்று குறிப்பிட்டு உள்ளார்.
NDTV விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது, "திரைக்கதையை எழுதியவர்கள் உண்மைகளை முழுமையாக அறிந்துகொள்ள ஆர்வம் காட்டவில்லை. காணாமல்போன கேரள பெண்களின் வழக்குகளை கை நிறைய எடுத்துக்கொண்டு, அவர்கள் ISIS அமைப்பில் இணைந்துவிட்டதாக ஒரு சுற்று சுற்றி உள்ளார்கள். இந்த குற்றச்சாட்டுகளுக்கு எந்தவிதமான ஆதாரங்கள் இல்லை. காணாமல்போனவர்கள் மீதான அக்கறையும் தென்படவில்லை.
அரைவேக்காடான சதி கோட்பாட்டை படமாக எடுத்து வைத்து இருக்கிறார்கள். இது ஒரு நீளமான வாட்ஸ் அப் ஃபார்வேட் மேசேஜே அன்றி வேறில்லை. கேரளா மாநிலத்தை பற்றியும், அதன் மக்களையும் பற்றியும் தெரியாமலேயே கேரளா ஸ்டோரி என்று படம் எடுத்து உள்ளார்கள். அதில் வரும் காட்சிகளும் கேரளாவில் எடுக்கப்பட்டதுபோல் இல்லை. காசர்கோட்டில் உள்ள ஒரு நர்சிங் கல்லூரி விடுதியில் 3 இந்து மற்றும் ஒரு கிறிஸ்தவ மாணவிகளை, முஸ்லிம் மாணவி ஒருவர் மூளைச் சலவை செய்து மதம் மாற்றுவதாக திரைப்படத்தின் கதை இருக்கிறது.
இந்த நயவஞ்சகத்தனமான திரைப்படத்தில் மூளை சலவை செய்யப்பட்டது கதாநாயகியா அல்லது படத்தின் தயாரிப்பாளரா என்பதை தீர்மானிப்பது கடினம். கிரிஞ்சான இந்த திரைப்படத்தில் நடிப்பும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை. இந்த கதையை எழுதியவர்கள் அதிக சிந்தனை இல்லாத ரசிகர்களையே குறிவைத்து உள்ளனர். பல மதத்தினர் கூட்டாக வாழும் கேரளாவில் 2 இந்து பெண்கள், பிற மதத்தினரின் அடிப்படை நம்பிக்கை பற்றி கூட தெரியாமல் இருப்பதாக படத்தில் காட்டி இருப்பதை நம்ப முடியவில்லை.

இந்த திரைப்படத்தில் முன்வைக்கப்பட்டு இருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு எந்த விதமான அடிப்படை ஆதாரங்களும் இல்லை. அந்த பெயருக்கும் கதைக்கும் கூட தொடர்பு இல்லை. மிக மோசமான, லாஜிக் இல்லாத திரைப்படம் தி கேரளா ஸ்டோரி. தங்களின் மோசமான நோக்களுக்கு ஏற்ப கதையை திருப்பாமல் இருந்திருந்தால் ஒரளவு பொழுதுபோக்கையாவது வழங்கி இருக்கும்." என்று அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதேபோல் பிரபல ஆங்கில நாளிதழான தி இந்தியன் எக்ஸ்பிரஸ், தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை மோசமான நடிப்புடன் உருவாக்கப்பட்டு இருக்கும் மிக மோசமான திரைப்படம் என்று கடுமையாக விமர்சித்து உள்ளது. 32000 பேர் மதம் மாற்றப்பட்டதாக கூறப்படும் தகவல் தவறானது என்றும், அவர்கள் ஐஎஸ் அமைப்பில் சேர இலங்கை வழியாக பயணம் செய்யும் காட்சிகள் கொடூரமாக சித்தரிக்கப்பட்டு இருப்பதாகவும், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் விமர்சித்து இருக்கிறது.
-
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம்












Click it and Unblock the Notifications