என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா... லட்சுமி ராமகிருஷ்ணனின் புது ஐடியா!
சென்னை: தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் லட்சுமி ராமகிருஷ்ணன் பேசிய ‘என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா' என்ற வாக்கியம் பட்டி தொட்டியெல்லாம் பிரபலம். எனவே, அந்த வாக்கியத்தினை வைத்து புதிய நிகழ்ச்சி ஒன்றைத் தயாரிக்கும் திட்டத்தில் இருக்கிறாராம் லட்சுமி ராமகிருஷ்ணன்.
‘என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா' என நிகழ்ச்சி ஒன்றில் எதேச்சையாகத் தான் சொன்னார் லட்சுமி ராமகிருஷ்ணன். ஆனால், அதனை கெட்டியாகப் பிடித்துக் கொண்ட நெட்டிசன்கள் அந்த வாக்கியத்தைப் பிரபலப் படுத்தி விட்டார்கள்.
சிறுகுழந்தைகள் முதற்கொண்டு ‘என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா' எனக் கூறும் அளவிற்கு அந்த வாக்கியம் தற்போது மிகவும் பிரபலம்.

புதிய விவாத நிகழ்ச்சி...
இந்நிலையில், இந்த பிரபலத்தை தனக்கு சாதகமாகப் பயன் படுத்த முடிவு செய்துள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன். இந்த வாக்கியத்தையே தலைப்பாகக் கொண்டு நிகழ்ச்சி ஒன்றை ஆரம்பிக்க அவர் முடிவு செய்துள்ளாராம்.

இளைஞர்களுக்கானது...
அது இளைஞர்கள் பங்குபெறும் விவாத நிகழ்ச்சியாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். மூன்று பெண்களுக்குத் தாயான தனக்கு இன்றைய இளைஞர்களுக்கு என்ன மாதிரியான பிரச்சினைகளை தாண்டி வருகிறார்கள் எனத் தெரியும் என பேட்டி ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.

இளைஞர்களின் பிரச்சினை...
எனவே, அவற்றைக் குறித்த விவாத நிகழ்ச்சியாக அது இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.

சீரியசா பேசினேன்...
மேலும், அவர் செல்லும் இடங்களிலெல்லாம் ஒருமுறையாவது அவரை அந்த வாக்கியத்தைச் சொல்லச் சொல்லிக் கேட்கிறார்களாம் மக்கள். சீரியசாக தான் கூறியது இவ்வாறு பிரபலம் ஆகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இயக்கம்...
ஏற்கனவே, இரண்டு திரைப்படங்களை லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications