ஜெ.வுக்காக திரையுலகம் உண்ணாவிரதம்.. குண்டுகல்யாணம், ராமராஜன் பங்கேற்பு- படப்பிடிப்புகள் ரத்து!
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் உள்ள ஜெயலலிதாவுக்கு ஆதரவாகவும், தீர்ப்பு குறித்த வருத்தத்தையும் உணர்வுகளையும் தெரிவிக்கும் நாளை ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் சென்னையில் உண்ணாவிரதத்தில் குதித்துள்ளது.
தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் என சகல தரப்பினரும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
தமிழ் திரையுலக கூட்டமைப்பு இதற்கான ஏற்பாட்டைச் செய்துள்ளது.

சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம்
சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே தமிழ் திரைத்துறையினர் கலந்து கொள்ளும் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியுள்ளது.

ராமராஜன்- குண்டு கல்யாணம்
அதிமுகவைச் சேர்ந்த நடிகர்கள் ராமராஜன், குண்டு கல்யாணம் உள்ளிட்டோர் உண்ணாவிரதத்தில் உட்கார்ந்துள்ளனர்.

சினிமா காட்சிகள் ரத்து
மேலும், தமிழகம் முழுவதும் நாளை திரையரங்குகளில் சினிமா படக்காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. எங்குமே படம் ஓடவில்லை.

அனைத்து அமைப்புகளும்
இந்த உண்ணாவிரதத்தில் தமிழ் சினிமாவின் அனைத்து அமைப்புகளும் பங்கேற்கின்றன.

படப்பிடிப்புகளும் ரத்து
சினிமா மற்றும் தொலைக்காட்சி படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

திரையரங்கு உரிமையாளர்கள்
தியேட்டர் அதிபர்களும் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். சென்னையில் நேற்று நடந்த தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

தேனாம்பேட்டையில்
இக்கூட்டத்தில் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் நான்கு காட்சிகளை ரத்து செய்வது என்றும், தேனாம்பேட்டையில் உள்ள சங்க அலுவலகத்தில் திரையரங்கு உரிமையாளர்கள் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாலை 5 மணி வரை உண்ணாவிரதம்
சென்னையில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டம் இன்று மாலை 5 மணி வரை நடைபெறும்.

யார் யார்?
இந்தப் போராட்டத்தில் தென்னிந்திய திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தென்னிந்திய நடிகர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு, சென்னை சிட்டி திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு, சினிமா பி.ஆர்.ஒ. யூனியன் உள்ளிட்ட ஒட்டுமொத்த திரையுலகினரும் கலந்து கொண்டுள்ளனர்.

புதுச்சேரியிலும் படம் ஓடலை
தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் இன்று தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. படங்கள் எதுவும் ஓடவில்லை. புதுச்சேரியிலும் இன்று அனைத்துக் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. முன்னதாக இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி சினிமா தியேட்டர் அதிபர்கள் சங்க தலைவர் லக்கி பெருமாள், சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை கண்டித்து தமிழ்நாட்டில் இன்று சினிமா நடிகர்கள் மற்றும் தியேட்டர் அதிபர்கள் போராட்டத்தில் கலந்து கொள்ளப்போவதாக அறிவித்து உள்ளனர். அவர்களது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் புதுச்சேரியிலும் இன்று அனைத்து சினிமா தியேட்டர்களும் மூடப்படும் என்று கூறியிருந்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications