செம்மொழி தமிழாய்வு நிறுவனம் இடம் மாறாது - ஈபிஎஸ் தலைமையிலான ஆட்சிக் குழு கூட்டத்தில் தீர்மானம்
செம்மொழி தமிழாய்வு நிறுவனம் இடம் மாற்றம் செய்யப்பட மாட்டாது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சிக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை: சென்னையில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் செம்மொழி தமிழாய்வு நிறுவனம் இடம் மாற்றம் செய்யப்படாது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற ஆட்சிக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை தரமணியில் உள்ள தமிழ்நாடு சாலை போக்குவரத்து நிறுவன வளாகத்தில் செம் மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் இயங்கி வருகிறது.இந்த நிறுவனத்தை திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தோடு இணைத்துவிடுவதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் முடிவெடுத்திருப்பதாகத் தகவல் வெளியாகின.

இது குறித்து சட்டசபையில் திமுக எம்எல்ஏ தங்கம் தென்னரசு கடந்த சில வாரங்களுக்கு முன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு விளக்கம் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு காஞ்சிபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூர் பெரும் பாக்கத்தில் 17 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு, பொதுப்பணித்துறை மூலம் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன.
தமிழின் செவ்வியல் பரிணாமங்களை உலகுக்கு எடுத் துக்காட்டும் வகையில் முது பெரும் தமிழறிஞர்களும், மூத்த ஆராய்ச்சியாளர்களும் இந்நிறுவ னத்தின் மூலம் உயர் ஆய்வு செய்து தமிழின் பெருமைகளை பறைசாற்றி வருகின்றனர்.
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ஆட்சிக் குழுத் தலைவர் என்ற முறையில் எனக்கோ, தமிழக அரசுக்கோ மத்திய அரசிடம் இருந்து இதுபற்றி எந்தத் தகவலும் வரவில்லை. மத்திய அரசிடம் இருந்து தகவல் கிடைத்த பிறகு தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று கூறினார்.
இன்று செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ஆட்சிக் குழுக்கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. அப்போது செம்மொழி தமிழாய்வு இடமாற்றம் செய்யப்படாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications