பட்டத்து யானையை கோடாறியால் வெட்டிய எறிபத்த நாயனார்: கரூரில் குவிந்த கூட்டம்
கரூர்: சிவனடியார்களை துன்பப்படுத்துவோரை எப்படி தண்டனை கொடுக்கலாம் என எறிபத்த நாயானார் புகழை போற்றும் விழா கரூர் பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்றது. இந்த விழாவைக் காண தமிழகம், பாண்டிச்சேரியில் இருந்து சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்திருந்தனர்.
சிவனுக்கு தொண்டு செய்கிறவர்களுக்கு தீங்கு ஏற்பட்டால் சிவனடியார்கள் சினம் கொள்வார்கள் என்னும் வரலாற்று ஆன்மீக உண்மை சம்பவத்தை மையப்படுத்தி செயல்விளக்கத்துடன் கரூரில் பூக்குடலை திருவிழா நடைபெற்றது.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு புகழ்ச்சோழன் மன்னன் ஆட்சிகாலத்தில் 64 நாயன்மார்களில் ஒருவரான இலைமலிந்த வேல்நம்பி எறிபத்த நாயனார் வழக்கம் போல் நந்தவனத்திலிருந்து பூக்களை பறித்து கொண்டு சிவனுக்கு பூஜை செய்ய சென்ற போது புகழ்சோழன் மன்னனின் பட்டத்து யானை பூக்கள் அடங்கிய பூக்குடலையை தட்டிவிட்டது.

இதனால் வெகுண்ட எறிபத்த நாயனார் மன்னனின் பட்டத்து யானை என்று கூட பார்க்காமல் கோடாரியால் யானையை வெட்டி கொன்றார்,இதை அறிந்த மன்னன் நாயன்மாரிடம் பட்டத்து யானை தவறு செய்ததற்காக தன்னையே கொல்ல வேண்டினார்.
மன்னன் கூறியதை கேட்ட நாயன்மார் சிவனுக்கு தொண்டு செய்பவருக்கு இடையூறு செய்ததாலே கோபத்தில் இந்த செயலை செய்ததாகவும் சம்பவத்தின் உண்மை நிலை அறிந்த மன்னரும்,எறிபத்த நாயனாரும் இறைவனுக்கு தொடர்ந்து தொண்டாற்றிடும் முடிவில் சமாதானம் அடைந்தனர்.

இந்த நிகழ்வை நினைவூட்டும் வகையில் ஆண்டு தோறும் கரூர் கல்யாணபசுபதீஸ்வரர் ஆலய வளாகத்தில் முன்பு நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில் இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், சிவனடியார்கள் பூக்குடலையுடன் பங்கேற்று ஊர்வலமாக நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று இறுதியாக கோவிலை வந்தடைந்தது.

இதில் ஆண் சிவனடியார்களும் பெண்சிவனடியார்களும் செண்டை மேளங்கள் முழங்கினர். இதில் தத்ரூபமாக அக்காலத்தில் நடைபெற்ற சம்பவத்தை சிவனடியார்கள் பொம்மை யானையுடன் நடித்து காட்டியதை கூடியிருந்த பக்தர்கள் பரவசத்துடன் கண்டு ரசித்தனர்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications