ஈரோடு அருகே மரத்தில் மோதி தீப்பிடித்த ஆம்புலன்ஸ்: 2 பெண்கள் உட்பட 3 பேர் உயிரிழப்பு
ஈரோடு: ஈரோடு அருகே சாலையோர மரத்தில் ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று மோதி தீப்பிடித்ததில், அதில் பயணம் செய்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஈரோடு அருகே நடுப்பாளையத்தைச் சேர்ந்தவர் கதிர்வேல். இவர் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அழைத்துச் செல்லப்பட்டார். கதிர்வேலுடன் அவரது மனைவி செல்லம்மாள், மகன் பாலசுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி லட்சுமி ஆகியோர் உடன் சென்றனர்.

மொடக்குறிச்சிக்கு அருகே உள்ள அய்யம்பாளையம் பகுதியில் வந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் அருகில் இருந்த மரம் ஒன்றில் மோதி தீப்பிடித்தது. இதில், ஆம்புலன்சில் பயணம் செய்த லட்சுமி, செல்லம்மாள் மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர் தங்கராஜ் ஆகியோர் தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், படுகாயங்களுடன் மீட்கப்பட்ட கதிர்வேல் மற்றும் பாலசுப்பிரமணியன், சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
இந்த விபத்தால் ஈரோடு-வெள்ளக்கோவில் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications