ஈரோடு மேற்கில் முத்துச்சாமி... ஈரோடு மாவட்ட திமுக வேட்பாளர்கள் பயோடேட்டா
சு.முத்துசாமி
ஈரோடு மேற்குத் தொகுதி திமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சு.
முத்துசாமி போட்டியிடுகிறார். கொங்கு வேளாளர். 1972-ஆம் ஆண்டு அதிமுவில் உறுப்பினராகச் சேர்ந்த முத்துசாமி 1977-ஆம் ஆண்டு ஈரோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2010-ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். திமுகவில் கட்சி உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 2011 தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தற்போது மேற்குத் தொகுதியில் போட்டியிடுகிறார்.
ஏ.ஜி.வெங்கடாசலம்
அந்தியூர் வேட்பாளராக ஏ.ஜி.
வெங்கடாசலம் அறிவிக்கப்பட்டுள்ளார். பத்தாம் வகுப்பு படித்துள்ளார். வன்னியர். அந்தியூர் பேரூராட்சித் துணைத் தலைவராக ஒருமுறையும், 3 முறை தொடர்ந்து திமுக சார்பில் பேரூராட்சித் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். அந்தியூர் நகரச் செயலாளர், ஒன்றியப் பொறுப்பாளர், ஒன்றியப் பிரதிநிதியாக பொறுப்பு வகித்துள்ளார். தற்போது, அந்தியூர் ஒன்றியச் செயலாளராகப் பதவி வகிக்கிறார்.
சச்சிதானந்தம்
மொடக்குறிச்சி தொகுதியில் சச்சிதானந்தம் போட்டியிடுகிறார். இவருக்கு இது முதல் தேர்தலாகும். இதற்கு முன்பு சுப்புலட்சுமி ஜெகதீசன் போன்றோர் போட்டியிட்டு வென்ற தொகுதி இது. சுப்புலட்சுமி ஜெகதீசன் தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை என்று கூறியதால்
சச்சிதானந்துக்கு சீட் கிடைத்தது. பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார். 1977 முதல் திமுகவில் இருந்து வருகிறார். தற்போது மாநில நெசவாளர் அணி செயலாளராக உள்ளார்.
ஆர். சத்தியா
பவானிசாகர் (தனி) தொகுதி வேட்பாளராக ஆர்.
சத்தியா அறிவிக்கப்பட்டுள்ளார். பவானிசாகர் அருகே உள்ள உத்தண்டியூர் கரிதொட்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர். இவர் பவானிசாகர் ஒன்றிய துணைச்செயலாளராக பதவி வகித்து வருகிறார். எஸ்.எஸ்.எல்.சி. படித்துள்ளார். இவருக்கு வயது 29. இவருடைய கணவர் பெயர் ஓ.ரமேஷ். இவருக்கு தீபக், திவாகர் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
குறிஞ்சி சிவக்குமார்
பவானி தொகுதி திமுக வேட்பாளராக குறிஞ்சி
சிவக்குமார் என்கிற என். சிவக்குமார் போட்டியிடுகிறார். மினரல் வாட்டர் நிறுவனம் உள்பட பல தொழில் செய்கிறார். 1986 முதல் தி.மு.க.வில் உறுப்பினராக உள்ளார். ஈரோடு நகர பிரதிநிதியாக 2 முறையும், வார்டு செயலாளராக 1 முறையும், மாவட்ட பிரதிநிதியாக 2 முறையும் பதவி வகித்துள்ளார்.
கே.பி.சாமி என்கிற பி.மோகனசுந்தரம்
பெருந்துறை திமுக வேட்பாளராக கே.பி.சாமி என்கிற பி.
மோகனசுந்தரம் (55) அறிவிக்கப்பட்டுள்ளார். 1980 முதல் திமுக-வில் உறுப்பினராக உள்ளார். 1985 - 1990-ஆம் ஆண்டுகளில் பெருந்துறை ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர். 1990-ஆம் ஆண்டு முதல் இன்று வரை பெருந்துறை ஒன்றியச் செயலாளராக உள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications